நடிகர் விக்ரம் பட இயக்குநர் அருண்குமார் திருமணம் சென்னையில் கோலாகலம்..கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள்!

பிப்ரவரி 2ஆம் தேதி இன்று அருண்குமார் திருமணத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சென்னை: 2014ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “பண்ணையாரும் பத்மினியும்” படத்தினை இயக்கிய S.U அருண்குமார் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய தென்னிந்தியாவின் பிரபல இயக்குநராக எளிதில் இடம்பிடித்தார். இவர் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த விக்ரம், விஜய் சேதுபதி எஸ்.ஜெ சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. 

1 /8

அருண்குமார் மதுரையில் பரவை எனும் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திரைத்துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.   

2 /8

அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும், சித்தா ,சிந்துபாத் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான சமீபத்திய இயக்குநராவார்.

3 /8

அருண்குமார் தன்னுடைய முதல் குறும்படங்கள் மூலம் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் படிப்படியாகத் திரைப்படத்தின் இயக்கினாராகத் தீவிரமாக பணியாற்றிவந்தார். இவரின் முதல் படமான பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.  

4 /8

சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் மக்களிடையே எதிர்பார்க்காத வரவேற்பை பெற்றார். சித்தா படத்தில் இவர் எழுதிய கதைகள் உடலை மெய்சிலிர்க்க வைத்தது என்று பலரும் விமர்ச்சனங்கள் செய்தனர்.

5 /8

சமீபத்தில் விக்ரமுடன் இணைந்து வீர தீரச் சூரன் படத்தின் பாகம் இரண்டை இயக்கவிருக்கிறார். இப்படம் மார்ச் இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

6 /8

இயக்குநர் அருண்குமார் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் சிரித்த புன்னகையுடன் நடிகர்கள் ஒன்றுக்கொண்டி பேசிக்கொண்ட புகைப்படம் வைரல்.

7 /8

விஜய் சேதுபதி, சித்தார்த், விக்னேஷ் சிவன், எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

8 /8

விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜெ சூர்யா உள்ளிட்ட வீர தீர சூரன் படத்தின் டீம் மொத்தமும் ஒன்றுகூடி திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.