Naga Chaitanya Talks About Sobhita Dhulipala : தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நாக சைதன்யாவிற்கு சமீபத்தில் நடிகை சோபிதாவுடன் திருமணம் நடைபெற்றது. தனது இரண்டாவது மனைவி குறித்து இதுவரை எங்கும் பேசாத அவர் தற்போது ஒரு நேர்காணலில் அவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
நாக சைதன்யா-சோபிதா திருமணம்:
தெலுங்கு திரையுலகில் இருக்கும் நாக சைதன்யா, பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் நாக சைதன்யா. சமந்தாவை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டே இவர், 2021ல் அவரை விட்டு பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து விவாகரத்து பெற்ற பின்னர், சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, பொன்னியின் செல்வன் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான, சோபிதா துலிபாலாவிற்கும் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் வெகு சிலரை கலந்து கொண்டனர். இரண்டு ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
2வாது மனைவி குறித்து பேசிய நாக சைதன்யா..
நடிகர் நாக சைதன்யாவும் சோபிதாவும் காதலித்து வந்த போதும் சரி திருமணம் முடிந்த பிறகு சரி தங்களது புகைப்படங்களை பெரும்பாலும் இணையத்தில் பதிவிடுவதில்லை. அப்படியே பதிவிட்டாலும் அந்த போட்டோவின் கமெண்ட் செக்ஷனை ஆப் செய்து விடுகின்றனர். வெளியிலும் இவர்களை எங்கும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை. அவர்களின் உறவை பற்றி பெரிதாக வெளியில் பேசிக்கொள்வதும் இல்லை. இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் தனது மனைவி குறித்து பேசியுள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சோபிதா குறித்து பேசிய நாக சைதன்யா, தனக்கு இருக்கும் யோசனைகள் அனைத்தையும் அவரிடம் கூறி விடுவதாகவும், தனக்கு குழப்பம் ஏதும் நிலவினால் அவரிடம் சென்று அதற்கான ஆலோசனை கேட்பதாகவும் கூறினார். மேலும், தனக்கு மன அழுத்தம் ஏதேனும் இருக்கும் சமயத்தில் எதையும் அவரிடம் சொல்லவில்லை என்றாலும் அதை அவர் புரிந்து கொள்வார் என்றும் கூறியிருக்கிறார்.
தனக்கு ஆலோசனை வழங்குவதில் தன் மனைவிதான் சிறந்தவர் என்று கூறும் நாக சைதன்யா, அனைத்தையும் சரியான இடத்திலிருந்து யோசித்து நடுநிலையான கருத்துகளை அவர் தனக்கு தெரிவிப்பார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தண்டேல் படம்:
நாக சைதன்யா-சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் தண்டேல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் சோபிதா குறித்து நாக சைதன்யா பேசினார். அப்போது, தனது மனைவியின் சொந்த ஊரான இந்த இடத்தில் தனது படம் நன்றாக ஓட வேண்டும் என விரும்புவதாகவும், இல்லையென்றால் வீட்டில் தலைக்காட்டவே முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நாக சைதன்யா, தனது மனைவி குறித்து இப்படி பேசியிருக்கும் விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | 2வது மனைவி சோபிதாவிற்கு நாக சைதன்யா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?
மேலும் படிக்க | தாலி கட்டிய நாக சைதன்யா..மேடையில் எமோஷனல் ஆன சோபிதா! வைரல் போட்டோஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ