புகழ்பெற்ற அவனியாபுரத்து ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்ப்பட்டு உள்ளது. அதாவது அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது பற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே முடிவெடுக்கிறார்கள். அதை தடை செய்யவேண்டும் எனக்கூறி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஒருமித்த கருத்து இருக்கவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் போட்டிக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்தது. மேலும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தும் குழுவை நீதிமன்றமே அமைக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.