மினி உலகக் கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இம்முறை இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 1996ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் தற்போது தான் ஐசிசி தொடர் நடைபெறுகிறது.
அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்று தெரிந்த உடனேயே இந்தியா அங்கு சென்று விளையாடாது என பிசிசிஐ தெரிவித்தது.
இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதையடுத்து பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்தியா vs பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படி இருக்கையில் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் வரும் 23ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரையில் இதுவரை நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய அனைத்து போட்டிகளிலும் வென்று 100 சதவீத வெற்றியை தன் வசம் வைத்துள்ளது. ஆனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் மோதியதில் பாகிஸ்தானே ஆதிக்கம் செலுத்தி உள்ளது. நடைபெற்ற 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றுள்ளது.
மேலும் படிங்க: Naman Awards 2025: எந்தெந்த வீரர்களுக்கு என்னென்ன விருதுகள்...? முழு லிஸ்ட்
தொடக்கமே பிரச்சனை
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானி நடைபெற உள்ளது என தெரிந்த உடனேயே இந்திய அணி அங்கு சென்று விளையாட மறுத்தது. அதனால் துபாய் மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து தொடருக்கு தொடங்குவதற்கு முன் நடைபெறும் கேப்டன்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்பட நிகழ்வுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது. அதாவது ரோகித் சர்மாவை பாகிஸ்தான் அனுப்ப மறுத்தது. இப்படி தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏராளமான பிரச்சனைகள். இதனால் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.
இது எங்களுக்கு வெறும் போட்டி மட்டுமே
இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 01) மும்பையில் நடந்த நானம் விருதுகள் விழாவின் போது ரோகித் சர்மா, பாகிஸ்தான் உடனான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை குறித்து பேசி உள்ளார்.
அவர், "கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பற்றி நிறைய பேசி இருக்கிறேன் என நினைக்கிறேன். இது எங்களுக்குள் நடைபெறும் விளையாட்டு போட்டியே தவிர வேறு ஏதும் இல்லை. போட்டியின் போது அனைவரையும் போல நாங்களும் வெற்றி பெறவே நினைப்போம். நாங்கள் சிறப்பாக விளையாட விரும்புகிறோம்.
தற்போது ஐசிசி கோப்பை தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. உங்களது ஆர்வம் புரிகிறது. நாங்கள் சமீபத்தில் தான் டி20 உலக கோப்பையை விளையாடினோம். அது எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இப்போது மற்றொரு ஐசிசி தொடரை எதிர்கொள்கிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு வீரரும் அவரவர் பாணியில் தயாராகி வருகின்றனர். பலர் உள்ளூர் போட்டிகளிலும், பலர் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி தங்களை தயார்படுத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ