Union Budget 2025: இன்னும் சில மணி நேரங்களில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.இதில் இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு வரக்கூடிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2025: இன்றைய பட்ஜெட்டில் இபிஎஸ் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை மோடி அரசாங்கம் ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது நடந்தால், அதனால் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பலதரப்பு மக்களும் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். தங்களுக்கான பிரத்தியேக அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
வரிசெலுத்துவோர், பெண்கள், மூத்த குடிமக்கள், வணிகர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைத்து வகையான மக்களும் எதிர்பார்ப்புகளின் ஒரு பட்டியலை கொண்டுள்ளனர். இவர்களில் துறை ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருப்பது இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ஆகும். இபிஎஃப் கந்தாதாரர்களுக்கு இபிஎஸ் பென்ஷன் குறித்து பட்ஜெட்டில் நல்ல செய்தி கிடைக்குமா? இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை (Employee Pension Scheme) நிர்வகிகின்றது. இபிஎஸ் மூலம் தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்படுகின்றது. இந்த ஓய்வூதிய அளவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை பல நாட்களாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் இதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இபிஎப் உறுப்பினர்களும், ஓய்வூதியதாரர்களும், ஊழியர் சங்கங்களும் நீண்ட காலமாக இபிஎஸ் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் வெறும் ரூ.1000 ஆக இருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகின்றது.
பணி ஓய்விற்குப் பிறகு பணத்திற்கான தேவையும் அதிகரித்து வருமானமும் குறைவதால் ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கை செலவுகளுக்கு ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள். அந்த வகையில் அவர்களது செலவுகளை ஈடுசெய்ய, ரூ.1,000 என்பது மிகவும் குறைவான தொகையாக இருப்பது பலமுறை அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட அலுவலக பணிகளில் செலவழித்த பின்னர், தரமான ஓய்வூதியத்திற்கான உரிமை தங்களுக்கு உள்ளது என்று இபிஎஃப் சந்தாதாரர்கள் கருதுகிறார்கள். சுமார் 40 ஆண்டுகள் இபிஎஃப் நிதிக்கு நீக்கு பங்களித்த பிறகும் மாத ஓய்வூதியமாக இவ்வளவு குறைவான தொகை கிடைப்பது சரியல்ல என்பது அவர்களது கருத்தாக உள்ளது.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் எப்பொழுது அதிகரிக்கப்பட்டது? 2014 ஆம் ஆண்டில் இபிஎஸ் ஓய்வூதியத்தை அரசு மாற்றியது. அப்போது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலம் நிறைவடைந்து விட்டது. இந்த கால இடைவெளியில் பணவீக்கம், வாழ்க்கைச் செலவுகள் என அனைத்திலும் பலவித மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் ஓய்வூதியத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்வது சரியல்ல என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
இந்த மாற்றங்களுக்கு ஈடுசெய்யும் விதமாக குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போதுள்ள ரூ.1,000 -இலிருந்து ரூ.7,5000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை உள்ளது. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்ப்பட்ட பட்ஜெடிலேயே இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு வெகுவாக இருந்தது. ஆனால் அப்போது எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும் இன்று இதற்கான அறிவிப்பு வரும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய பட்ஜெட்டில் இபிஎஸ் ஓய்வூதிய அளவு ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டால் அது இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும். இது அவர்களது வாழ்க்கை சுமையை குறைப்பதோடு நிதி பாதுகாப்பையும் வழங்கும். பணியில் சேர்ந்தது முதல் இபிஎஃப் மற்ற்ய் இபிஎஸ் கணக்கில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகையை டெபாசிட் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்விற்குப் பிறகு கிடைக்கக்கூடிய ஓய்வூதிய அளவு அதிகரிக்கப்படுவது EPFO மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கும்.