2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு மீண்டும் முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். வரும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை. மேலும் முகமது சிராஜ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது. அதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்காக ஐசிசி-யிடம் சிறிது நாட்கள் அனுமதி கேட்டுள்ளது பிசிசிஐ.
மேலும் படிக்க | இனி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பில்லை... கேப்டனை மாற்றுமா சிஎஸ்கே?
மீண்டும் அணியில் ஷமி
டி20 அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெயர் முகமது ஷமி. 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி வலது குதிகால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்தார். சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓய்வு தேவை பட்டதால் அவர் இடம் பெறவில்லை. பிறகு உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி இருந்தார். இதனால் தற்போது அணிக்கு திரும்பி உள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கடைசி 2 போட்டிகளில் ஷமி இடம் பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் காலில் வீக்கம் இருந்ததால் அவர் பங்கேற்கவில்லை.
பவுலர்கள் யார் யார்?
ஷமியை தவிர, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும் ஆல் ரவுண்டராக ஆஸ்திரேலியா தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல வாஷிங்டன் சுந்தரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்களாக துருவ் ஜூரல் மற்றும் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெற்ற ஜிதேஷ் சர்மா, ராமன்தீப் சிங், அவேஷ் கான், யாஷ் தயாள் மற்றும் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் இடம் பெறவில்லை. ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். குல்தீப் யாதவ் ஒருநாள் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.
இந்த வீரர்களுக்கு இனி டி20 அணியில் இடம் இல்லை
பல இளம் வீரர்கள் டி20 அணியில் சமீப நாட்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் சீனியர் வீரர்களுக்கு இனி டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ருதுராஜ், சுப்மன் கில், இஷான் கிசான், ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரியான் பராக், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகியோர் இனி டி20 அணியில் இடம் பெறுவது சந்தேகமே.
இங்கிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (WK), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் , வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (WK)
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி தொடர்! இந்த மூன்று வீரர்களை கழட்டிவிடும் பிசிசிஐ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ