IND vs AUS 3rd Test, KL Rahul: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை விளையாட ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிப். 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர், பிப். 17ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி, மத்திய பிரதேசம் இந்தூரில் வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இருப்பினும், சில ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக ஹேசல்வுட், வார்னரும், தனிப்பட்ட காரணமாக கேப்டன் பாட் கம்மின்ஸ், முதல் தர போட்டிகளில் விளையாட ஆஷ்டன் அகார், மாட் ரென்ஷா ஆகியோரும் சென்றுள்ளனர். இதில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் பாட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவார் என்றும், தக்க சமயத்தில் வர இயலவில்லை எனில் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துவரார் என தெரிகிறது.
இந்திய அணி, இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்த நிலையில், இம்முறை கோப்பையை வென்ற ஆக வேண்டும் என வீரர்கள் முதல் கடைக்கோடி ரசிகர்கள் வரை எதிர்பார்ப்பில் உள்ளனர். மிடில் ஆல்-ஆர்டர், ஆல்-ரவுண்டிங், பந்துவீச்சில் வலுமையாக காணப்படும் இந்தியா ஓப்பனிங்கில் பெரிதும் சுமாராக உள்ளது.
கே.எல்.ராகுலின் சமீபத்திய பார்ம் மிகவும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை அணியில் சேர்க்க வேண்டும் என எதிர்ப்புகள் வலுத்தன. கிளாஸிக் பேட்டரான ராகுல், சில நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு ஆடினால், தனது பார்மை பிடித்துவிடலாம் என்றும் சில மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராகுலின் இருப்பு டிராவிட் - ரோஹித் இணைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Cricket is all about precision and perfection! Taking a step closer towards perfection, KL Rahul visited the SG factory to make sure his equipment is flawless.@klrahul #sgcricket #klrahul #believe #become #cricket pic.twitter.com/Tys6CdOEuQ
— SG cricket (@sgcrickett) February 22, 2023
அவரிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது. இந்நிலையில், அவர் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பதிலாக, மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நடைபெறும் இரானி கோப்பை தொடரில் ராகுல் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில்,"தொடர்ந்து வரும் இந்த விமர்சனத்தால் ராகுலின் நம்பிக்கை நிலைத்தடுமாறியிருக்க வேண்டும். இந்த சீசனின் கடைசி உள்நாட்டு ஆட்டமான இரானி கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக விளையாட செல்வது மோசமான யோசனையாக இருக்காது. அங்கு அவர் ஆவேஷ் கான் போன்ற தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியும்.
கே.எல். ராகுல் சில ரன்கள் எடுத்தால், அது அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் அவர் இரானி கோப்பைக்கு பிறகு அகமதாபாத்தில் நடைபெறும் இறுதி டெஸ்டுக்கான அணியில் அவர் சேரலாம். அது சிறப்பாக இருக்கும். ஆனால் டிராவிட் இதனை விரும்ப மாட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நான் நிச்சயம் இந்த ஆண்டு விளையாடுவேன்! அப்டேட் கொடுத்த சிஎஸ்கே வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ