BCCI New Rules | இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணிக்குள் நிர்வாக ரீதியாக அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் படுதோல்வி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி என அடுத்தடுத்த மிகப்பெரிய தோல்விகளை இந்திய அணி சந்தித்ததால், கடும் அதிருப்தியில் இருக்கிறது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இது குறித்து அண்மையில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருடன் மும்பையில் ஆலோசனை நடத்தியது பிசிசிஐ. அதில் இந்திய அணி தோல்வி குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய கிரிக்கெட் போர்டு, இனி நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியுள்ளது.
அதன்படி, இந்திய அணி வெளிநாடு சுற்றுப் பயணம் செல்லும்போது கூடவே மனைவியை அழைத்துச் செல்ல அனுமதியில்லை. ஒருவேளை அவர்கள் தனியாக வருவது என்றாலும் 2 வாரங்களுக்கு மேல் வீரர்களுடன் தங்கியிருக்கக்கூடாது. எல்லா பிளேயர்களும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், தனியாக யாரும் எங்கும் பயணம் செய்து வரக்கூடாது என தெரிவித்துள்ளது. எல்லா பிளேயர்களும் ஒரே பேருந்து, விமானத்தை பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ள பிசிசிஐ, யாருக்கும் இதில் சிறப்பு சலுகை வழங்கப்படாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், பயிற்சி நடக்கும் நேரங்களில் எல்லா பிளேயர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு உட்படாதவர்கள் மீது இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ள பிசிசிஐ, எல்லா பிளேயர்களும் இனி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிட்ன்ஸ் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அணியில் இடம்பிடிக்கும் பிளேயர்கள் ஒரு தொடரில் சிறப்பாக ஆடவில்லை என்றாலும் அவர்களுக்கு போட்டி ஊதியம், ஆண்டு ஊதியத்தில் சம்பளம் குறைக்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது இதுவரை ஒரு ஆண்டு மற்றும் போட்டி ஊதியங்கள் என வரையறுத்து சம்பளத்தை கொடுத்து வந்தது பிசிசிஐ. அதில் இப்போது கை வைத்திருக்கிறது.
ஒரு பிளேயர் சிறப்பாள விளையாடவில்லை என்றாலும் அவர்களுக்கான ஊதியம் என்பது அப்படியே கிடைத்துவிடும். ஆனால் இனி அப்படி கிடைக்காது. ஒரு தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் சம்பள குறைப்பை எதிர்கொள்ள நேரிடும். இந்த விதிமுறைகள் எல்லாம் சீனியர் பிளேயர்களின் ஒழுங்காக நடந்து கொள்ளாததால் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக விராட் கோலி அணியினருடன் சேர்ந்து பயணிப்பத்தில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா பயிற்சிக்கு செல்வதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும் படிக்க | ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார்! விரைவில் அறிவிப்பு -முழு விவரம்
மேலும் படிக்க - ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: டிக்கெட் விலை அறிவிப்பு - முழு விவரம் இதோ!
மேலும் படிக்க - இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பாரா இந்த ஸ்டார் பவுலர்? பிசிசிஐ ரியாக்ஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ