மதுரை மெட்ரோ ரயில்: திட்டத்திற்கு ஓகே சொல்லுமா மத்திய அரசு...? CMRL அதிகாரிகள் ஆய்வு

Madurai Metro Train: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து CMRL அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இத்திட்டம் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் அளித்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 17, 2025, 04:30 PM IST
  • விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் அனுப்பிவைக்கப்பட்டது.
  • இதற்கான ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தகவல்
  • ஒப்புதல் கிடைத்தால் சில நாள்களிலேயே கட்டுமான பணிகள் தொடங்கும்.
மதுரை மெட்ரோ ரயில்: திட்டத்திற்கு ஓகே சொல்லுமா மத்திய அரசு...? CMRL அதிகாரிகள் ஆய்வு title=

Madurai Metro Train Latest News Updates: மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்தின் செயலாக்கம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தெற்கு ரயில்வே துணை பொறியாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் இன்று (ஜன. 17) மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரையில் 31.93 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட உள்ள மெட்ரோ வழித்தடத்தில், நிலத்திற்கு கீழே அமையும் 4.65 கி.மீ., தூரம் உள்ள சுரங்கப் பாதை வழித்தட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்கொண்டனர். குறிப்பாக, மதுரை ரயில் நிலையம், ஆண்டாள்புரம் - மதுரைக் கல்லூரி இடையே நிலத்திற்கு கீழே அமையும் ரயில் நிலையங்களின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மெட்ரோ ரயில் - அதிகாரிகள் ஆய்வு

விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்புதல் கிடைப்பதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் துறை ரீதியான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Budget 2025: சாமானியர்கள், மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கு.. அடித்துச்சொல்லும் நிபுணர்கள்

ஆய்வுக்கு இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர்,"மதுரை ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிலையத்தையும் இதனுடன் இணைப்பதற்கு சாத்திய கூறுகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். 

மதுரை ரயில் நிலையத்தின் புதிய வடிவமைப்புடன் மெட்ரோ ரயில் நிலையத்தின் வடிவமைப்பையும் ஒருங்கிணைத்து பயணிகள் சிரமம் ஏற்படாத வண்ணம் வந்து செல்ல திட்டமிட்டு வருகிறோம். எதிர்காலத்தில் பயணிகள் எப்படி ஒரு ரயில் நிலையத்திலிருந்து மற்ற ரயில் நிலையத்துக்கு செல்வது குறித்து இன்று ஆய்வு நடத்தினோம்.

மதுரை மெட்ரோ ரயில் - எப்போது செயல்பாட்டுக்கு வரும்?

மத்திய அரசு ஒப்புதல் அளித்த சில மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். மதுரை மெட்ரோ திட்டத்திற்கு டெண்டர்கள் பணிகள் அடுத்து தொடங்குவோம், அதற்கு முன் நில எடுப்பு பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும். நில எடுப்பு பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பணிகள் தொடங்கி ரயில் சேவை நான்கு வருடங்கள் ஆகும். மதுரை மெட்ரோ திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை" என்றார்.

மதுரை மெட்ரோ ரயில் - மொத்த பட்ஜெட் எவ்வளவு?

கடந்த 2021ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் போது மதுரை, கோவை மெட்ரோ குறித்த அறிவிப்பு வெளியானது.  குறிப்பாக, மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ நிறுவனம் கடந்தாண்டு ஜூலையில் சமர்பித்தது. 

மதுரை திருமங்கலத்தில் தொடங்கும் மெட்ரோ பணிகள் ஒத்தக்கடை பகுதிவரை நீள்கிறது. சுமார் 31.93 கி.மீ., தூரத்தில் 17 நிறுத்தங்களுடன் மதுரை மெட்ரா திட்டமிடப்பட்டுள்ளது. 45 ஏக்கரில் திருமங்கலத்திலேயே மெட்ரோ பணிமனையும் அமைய இருப்பதாக கூறப்படுகிறது. மதுரை மெட்ரோ பணிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 360 கோடி தேவைப்படும் என விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Budget 2025: 5 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், பட்ஜெட்டில் EPFO முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News