போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்க போகும் தமிழ்நாடு அரசு - காரணம் இதுதான்..!

Ration Card | தமிழ்நாட்டில் விரைவில் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடித்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் சமூக நலத்திட்டங்கள் தகுதியானவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் போலி ரேஷன் கார்டுகளை (Ration Card) நீக்க விரைவில் நடிக்கை எடுக்கப்பட உள்ளது.

1 /8

ரேஷன் கார்டுகளை (Ration Card) அடிப்படையாக வைத்தே தமிழ்நாட்டில் பல சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கலைஞர் உரிமைத் தொகை திட்டம் ரேஷன் கார்டுகளின் அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  

2 /8

போலி ரேஷன் கார்டுகள் காரணமாக தகுதியான பயனாளிகள் இருந்தும் அவர்களுக்கு அரசின் உதவி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஏனென்றால் அரசு குறிப்பிட்ட இலக்கு வைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களை கொடுக்கிறது.

3 /8

இதற்காக பயனாளிகளை தேர்வு செய்யும்போது போலி ரேஷன் கார்டு அல்லது தகுதியற்ற ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இந்த திட்டங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் உண்மையான பயனாளிகளை கண்டைவதில் சிக்கல் உள்ளது. 

4 /8

அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரிசி மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பலர் மோசடியாக பயனாளிகளாக சேர்ந்துள்ளனர். இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் முதலமைச்சர் சித்தராமையாவிடம் தெரிவித்துள்ளனர்.

5 /8

இதனைத் தொடர்ந்து போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், சரியான முகவரியில் வசிக்காத ரேஷன் அட்டைதாரர்கள், தகுதியற்ற பயனாளிகள் உள்ளிட்டோரை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், தகுதியில்லாதவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

6 /8

இந்த நடவடிக்கை விரைவில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ரேஷன் கார்டு வைத்திருந்தும், அரசு வெளியிட்டுள்ள தகுதிகள் இருந்தும் பல பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் எல்லோரும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.

7 /8

இதனை கவனித்த அரசு, இப்போது கலைஞர் உரிமைத் தொகை பெறும் தகுதியற்ற பயனாளிகளை கண்டறியும் பணியை தொடங்கியுள்ளது. அப்போது ரேஷன் கார்டு தகவல்கள் முறையாக இருக்கிறதா? என அதிகாரிகள் விசாரிப்பார்கள். அப்படி செய்யும்போது ரேஷன் கார்டு முகவரியில் வசிக்காதவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

8 /8

இப்படி செய்யும்போது புதிய பயனாளிகள் கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. துணை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே இன்னும் 3 மாதங்களில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என அறிவித்துள்ளதால் அதற்கு முன்னதாக தகுதியற்ற ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.