லண்டன்: இந்தியன் பிரீமியர் லீக்கின் (Indian Premier League) வரவிருக்கும் சீசனுக்கு சற்று முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பெரிய பின்னடைவைப் பெற்றுள்ளது. ஐபிஎல் 2020 க்காக அவர் தனது அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். நாங்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) பற்றி பேசுகிறோம். காயம் காரணமாக அந்த வீரர் இலங்கை சுற்றுப்பயணம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளார். ஆர்ச்சருக்கு வலது முழங்கையில் காயம் உள்ளது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை ஜோஃப்ரா ஆர்ச்சர் தனக்கு ஏற்பட்ட முழங்கை காயத்தை ஸ்கேன் செய்து பார்த்ததில், அதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதைக் காட்டியுள்ளது. அவர் இப்போது காயம் குறித்து ஈ.சி.பியின் மருத்துவ குழுவுடன் இணைந்து சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவர் ஜூன் மாதம் வரை விளையாட முடியாது. கோடைகாலத்திற்குள் ஆடத் தயாராகி விடுவார் எனக் கூறப்பட்டு உள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. தொடரின் முதல் டெஸ்ட் மார்ச் 19 அன்று தொடங்குகிறது. இதன் பின்னர், மார்ச் 29 முதல் ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இந்த இரு தொடர்களிலும் அவர் விளையாட மாட்டார்.
25 வயதான ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கடந்த ஆண்டு இந்த அணிக்காக 11 போட்டிகளில் விளையாடிய அவர் அதே எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல், 2018 இல், அவர் 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.