300 யூனிட் மின்சாரம் இலவசம், 78,000 ரூபாய் மானியம் - மோடி அரசின் மிகப்பெரிய அறிவிப்பு

Free electricity | பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜ்னா திட்டம் மூலம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக பெறலாம், 78 ஆயிரம் ரூபாய் மானியம் பெறலாம். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 17, 2025, 10:28 AM IST
  • பிரதமர் மோடியின் சூப்பர் திட்டம்
  • எல்லா வீடுகளுக்கும் இலவச மின்சாரம்
  • சோலார் பேனல் நிறுவ முதலீடு அவசியம்
300 யூனிட் மின்சாரம் இலவசம், 78,000 ரூபாய் மானியம் - மோடி அரசின் மிகப்பெரிய அறிவிப்பு title=

Free electricity Scheme | மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம் பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜ்னா. இந்த திட்டத்தில் மிகப்பெரிய அப்டேட் வந்துள்ளது. அதாவது இலவச மின்சாரம் மற்றும் மானியம் பெறுவது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இப்போது இந்த திட்டத்தை மக்கள் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின் இந்த திட்டத்தில், 300 யூனிட் இலவச மின்சாரத்துடன், ரூ.78,000 வரை மானியமும் கிடைக்கும். பிரதமர் சூர்யா கர் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்தத் திட்டத்தில் இரண்டு புதிய கட்டண அம்சங்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களில், தங்கள் வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவ விரும்புவோர், ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் புதிய கட்டணத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனாவின் பயனாளிகள் சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதில் ஏற்படும் செலவுகளின்போது பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு PM சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனாவைத் தொடங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும். இதனுடன், உங்கள் வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி கூரையை நிறுவுவதற்கு மத்திய அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. சோலார் பேனல் நிறுவும் போது, இதற்கான முதலீட்டு தொகையை பயனாளியின் வங்கி கணகுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். 2 கிலோவாட் வரையிலான பேனலுக்கு ரூ.30,000, 3 கிலோவாட் திறன் கொண்ட பேனலுக்கு ரூ.48,000 மற்றும் 3 கிலோவாட் திறன் கொண்ட பேனலுக்கு ரூ.78,000 மானியம் மத்திய அரசு கொடுக்கிறது.

இதில் இரண்டு வகைகள் உள்ளன. முதாவது என்னவென்றால், RESCO ஆப்சனில், வேறொருவர் உங்கள் வீட்டில் சோலார் பேனலை அமைத்து கொடுப்பார். சோலார் பேனல் நிறுவுவதற்கு நீங்கள் ஒரு பைசா கூட கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், அந்த சோலார் பேனல் மூலம் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டாவது ULA ஆப்சனில், டிஸ்காம் அல்லது மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் உங்கள் வீட்டில் சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவும். இதற்கும் நீங்கள் எந்த பணத்தையும் செலவிட வேண்டியதில்லை. முதலீடு பணம் நீங்கள் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்துக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால், https://pmsuryaghar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஆஃப்லைனில் பதிவு செய்ய விரும்பினால், அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | உங்கள் பாஸ்போர்ட் காலாவதி ஆகப்போகிறதா... அப்போ கண்டிப்பா இந்த ரூல்ஸை படிங்க!

மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஹைகோர்ட் முக்கிய உத்தரவு! திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News