பொங்கல் வின்னர் யார்? வெளியான 5 படங்களில் ‘இது’தான் வசூலில் டாப்!!

Pongal Movie Releases Box Office Collection Report : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 படங்கள் வெளியாகின. இதில், எந்த படம் அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Jan 17, 2025, 10:22 AM IST
  • பொங்கலுக்கு வெளியான 5 படங்கள்!!
  • பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..
  • டாப்பில் யார்?
பொங்கல் வின்னர் யார்? வெளியான 5 படங்களில் ‘இது’தான் வசூலில் டாப்!! title=

Pongal Movie Releases Box Office Collection Report : 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழில் பல படங்கள் வெளியாகின. அதில், குறிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது 5 படங்கள்தான். அந்த 5 படங்களில், எது அதிக வசூலை பெற்றிருக்கிறது தெரியுமா?

1.கேம் சேஞ்சர்:

ராம் சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், கேம் சேஞ்சர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவான இந்த படம், ஷங்கரின் அதே பழைய டெம்ப்ளேட் உடன் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகின. ஷங்கரே, தனக்கு இந்த படத்தில் பெரிய திருப்தி இல்லை என ஒரு நேர்காணலில் தெரிவித்து விட்டார். 

2.வணங்கான்:

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் படம், வணங்கான். இதுவும், எப்போதும் போல மனதை நொறுக்கும் க்ளைமேக்ஸ் கொண்ட பாலாவின் படமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம், அருண் விஜய்க்கும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

3.மதகஜராஜா:

விஷால் நடிப்பில், 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட படம், மதகஜராஜா. சுந்தர்.சி நடிப்பில் உருவான இந்த திரைப்படம், கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து இந்த பொங்கலை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி வெளியானது. பல வருடங்கள் கழித்து வெளிவரும் இந்த படம், ரசிகர்களின் தற்போதைய மனநிலைக்கு ஏற்ப இருக்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ஆனால், படத்தின் காமெடி மற்றும் சில காதல் அம்சங்கள் ரசிக்க வைப்பதால், அந்த சந்தேகங்கள் தவிடுபொடி ஆகி இருக்கிறது. 

இந்த படத்தில் விஷாலின் ஹீரோயிசத்தை விட, சந்தானம் காமெடிக்குதான் மக்கள் அதிக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். கூடவே, அஞ்சலி மற்றும் வரலக்ஷமியின் கிளாமரும் ப்ளஸ்ஸாக அமைந்திருக்கின்றன. விஜய் ஆண்டனியின் பாடல்கள், பின்னணி இசையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

4.காதலிக்க நேரமில்லை:

சுமார் 6 வருடங்களுக்கு பிறகு, கிருத்திகா உதயநிதி இயக்குநராக கம்-பேக் கொடுத்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. இன்றைய தலைமுறையினரின் காதலையும், அதில் இருக்கும் பிரச்சனைகளையும் இந்த படம் காண்பித்துள்ளது. இந்த படத்தில், ரவி மோகன் (ஜெயம் ரவி என அழைக்கப்பட்டவர்) ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். 

டிரைலரும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தை, ஹீரோ-ஹீரோயினின் நடிப்பே தாங்கி பிடிக்கிறது. இந்த படம், பொங்கல் ரிலீஸாக ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. இந்த படமும், ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், இன்னும் பெரிய அளவில் இப்படம் ரீச் ஆகியிருக்கலாம் என படம் பார்த்தவர்கள் தெரிவிகக்கின்றனர். 

5.நேசிப்பாயா:

விஷ்ணு வரதன் இயக்கத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 14ஆம் தேதி வெளியான படம், நேசிப்பாயா. இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழில் 10 வருடங்கள் கழித்து டைரக்ஷனில் கம்-பேக் கொடுத்திருக்கும் விஷ்ணு வரதன் படம் என்பதால் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ராெமான்ஸ்-த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தின் கதை, ரசிகர்களுடன் சரியாக கனெக்ட் ஆகாத காரணத்தால், பெரிதாக தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை. 

5 படங்களில் எது டாப்? 

கேம் சேஞ்சர் படம் 7 நாட்களில் ரூ.186 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இப்படம் அந்தளவிற்கு பெரிய வசூலை பெறவில்லை. 

வணங்கான் படம், இந்திய அளவில் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மதகஜராஜா படம், ரிலீஸாகி 5 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், 4 நாள் முடிவில், சுமார் 19 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாளில், சுமார் 6 கோடி ரூபாயை மதகஜராஜா படம் வசூலிக்கும் எனக்கூறப்படுகிறது. 

காதலிக்க நேரமில்லை படம் வெளியாகி 3 நாட்கள் ஆகியிருக்கிறது. இப்படம், 2 நாட்களில் சுமார் 3.77 கோடி வசூலித்ததாக கூறப்படுகிரது. 3ஆம் நாளில், இந்த வசூல் 5 கோடியை எட்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

நேசிப்பாயா படம், முதல் நாளில் 64 லட்ச ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, இந்த படம் பெரிய வசூலை பெறவில்லை என கிசுகிசுக்கப்படுகிறது.

வசூலிலும், விமர்சனத்திலும் மதகஜராஜா படம், தமிழகத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக இருக்கிறது. எனவே, இதனை பலர் பொங்கல் வின்னர் எனக்கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம்?

மேலும் படிக்க | 2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News