கடந்த சில ஆண்டுகளாக வாகன உற்பத்தியாளர்கள் டீசல் மாடல் கார்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதால் பல டீசல் கார்கள் இந்திய சந்தையில் இருந்து மறைந்துவிட்டன.
கடந்த சில ஆண்டுகளாக மாருதி சுசுகி உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்கள் டீசல் மாடல் கார்களை உற்பத்தி செய்வதையும் விற்பனை செய்வதையும் நிறுத்திவிட்டனர். இதனால் பல டீசல் கார்கள் இந்திய சந்தையில் இருந்து மறைந்துவிட்டன. இருப்பினும் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா தொடர்ந்து டீசல் கார்களை வழங்கி வருகின்றன. அது மட்டுமல்லாது டாட்டா மோட்டார்ஸின் முதன்மை கார்களான சஃபாரி மற்றும் ஹாரியர் டீசல் எஞ்சின்களுடன் கிடைக்கின்றன. மேலும், மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் டாடாவின் அல்ட்ராஸ் காரின் விலை, அதன் அம்சங்கள் மற்றும் மைலேஜ் குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.
இந்தியாவின் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் டீசல் காரான டாடா அல்ட்ராஸ் ரூ.6.65 லட்சம் முதல் ரூ.11.30 லட்சம்(ex-showroom price) வரை கிடைக்கிறது. டீசல் கார்கள் ரூ.8.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
இந்த கார் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போசார்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய ஆப்சனில் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் NA பெட்ரோல் எஞ்சின் 6 Speed DCT (இரட்டை-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) விருப்பத்தையும் பெறுகிறது. இந்த கார் CNG வகைகளிலும் (NA எஞ்சினுடன்) வருகிறது.
அல்ட்ராஸின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 4000 ஆர்பிஎம்-இல் 90PS மற்றும் 1250-3000 ஆர்பிஎம்-இல் 200 Nm-ஐ உற்பத்தி செய்கிறது. இது 5 Speed MT உடன் மட்டுமே வருகிறது மற்றும் 23.64 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது (ARAI சான்றளிக்கப்பட்டது).
இந்த கார் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக்காக இருப்பதால், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, அதாவது காரில் பயணிக்கும்போது ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பங்களுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
டாடா அல்ட்ராஸ் பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 மதிப்பெண்களை பெற்றுள்ளது. 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ISOFIX குழந்தை-இருக்கை நங்கூரங்கள், ஆட்டோ பார்க்கிங் லாக் (DCT மட்டும்) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.