விராட் கோலி செஞ்ச காரியம்... இந்திய அணிக்கு அடிச்சது லக்கு - எப்படி தெரியுமா?

IND vs SA, Virat Kohli: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பெயில் மாற்றி வைத்தது தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 27, 2023, 07:30 PM IST
  • இந்தியா 245 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
  • தென்னாப்பிரிக்க அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
  • டீன் எல்கர் சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.
விராட் கோலி செஞ்ச காரியம்... இந்திய அணிக்கு அடிச்சது லக்கு - எப்படி தெரியுமா? title=

IND vs SA, 1st Test Match Update In Tamil: தென்னாப்பிரிக்காவின் சென்சூரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியான இது, நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

IND vs SA: திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்

அதன்படி, நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 59 ஓவர்கள், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 8.4 ஓவர்கள் என மொத்தம் 67.4 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களை எடுத்தனர். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளையும், பர்க்ர் 3 விக்கெட்டுகளையும், கோட்ஸி மற்றும் யான்சன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தொடர்ந்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனர் மார்க்ரம் 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், இரண்டாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டீன் எல்கர் (Dean Elgar) - ஸோர்ஸி ஆகியோர் 93 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸோர்ஸி 28 ரன்களிலும், அடுத்து வந்த கீகன் பீட்டர்சனும் 2 ரன்களிலும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி பந்துவீச்சில் விக்கெட் எடுக்க சற்று திணறி வருகின்றது. 

IND vs SA: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவர்களில் 194 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தென்னாப்பிரிக்கா 51 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. இன்னும் முழுமையாக ஒரு செஷன் விளையாடப்படும் நிலையில், இன்றே தென்னாப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுவிடும் என தெரிகிறது. 

மேலும் படிக்க | ஐபிஎல் வீரர் vs முன்னாள் காதலி: கட்டாய கருக்கலைப்பு... போதைப்பொருள் - பின்னணி என்ன?

IND vs SA: விராட் கோலி விட்ட பிரம்மாஸ்திரம்

முன்னர் குறிப்பிட்டது போல டீன் எல்கர் - ஸோர்ஸி ஜோடி சுமார் 25 ஓவர்கள் இணைந்து விளையாடியது. இந்த 25 ஓவர்களிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பல அஸ்திரங்களை எய்தும் அவர்களின் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை. ஆனால், விராட் கோலியின் பிரம்மாஸ்திரம் இந்திய அணி தேடி வந்த அந்த விக்கெட்டை கொடுத்தது. ஸோர்ஸி 28ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அப்போது 28ஆவது மற்றும் 29ஆவது ஓவர்களுக்கு இடையில் விராட் கோலி அந்த செயலை செய்தார். அதாவது, பீல்டிங் பொஸிஷனில் இருந்து நேராக ஸ்ட்ரைக்கை முனைக்கு சென்ற விராட் கோலி ஸ்டம்பின் மேல் இருந்த இரண்டு பெயில்ஸையும் இடம் மாற்றி வைத்தார். இதன்பின்னர், 29ஆவது ஓவரை பும்ரா வீச வந்தார். முதல் நான்கு பந்துகளும் டாட் பால் ஆக, ஐந்தாவது பந்தில் பவுண்டரியும் சென்றது. கடைசி பந்தில் பும்ரா வீசிய பந்தில் ஸோர்ஸிக்கு அவுட்சைட் எட்ஜ் வாங்கி ஸ்லிப்பில் இருந்த ஜெய்ஸ்வாலிடம் தஞ்சம் புகுந்தது. அதன்பின் 31ஆவது ஓவரை பும்ரா வீசியபோது, 2ஆவது பந்திலேயே கீகன் பீட்டர்சனும் ஆட்டமிழந்தார். 

இது முதல்முறையல்ல

விராட் கோலியின் (Virat Kohli) இந்த செயலுக்கு பின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது பலரையும் கவர்ந்தது எனலாம். இது ஒன்றும் கிரிக்கெட்டில் புதியதில்லை எனலாம். சமீபத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டூவர்ட் பிராட் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் விக்கெட் வேண்டும் என்பதற்கு இதேபோன்று இரண்டு முறை பெல்ஸை மாற்றிவைத்து, இதேபோன்று இரண்டு முறையும் வெற்றிகரமாக விக்கெட் வீழ்த்தியதும் நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | இந்திய அணி 2023ஆம் ஆண்டில் படைத்த சாதனைகள் - அதிக சிக்ஸர்கள் முதல் அதிக சதங்கள் வரை...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News