நவகிரகங்களில் யோகக்காரகர் என்று அறியப்படும் சுக்கிர பகவான் வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு என சுகத்திற்கும் காரணமானவர் சுக்கிரன் தான். திருமணத்திற்கு அடிப்படையான தாம்பத்ய வாழ்க்கைக்கும் சுக்கிர பகவானே காரணம். சுக்கிரனின் அனுக்கிரகம் இருந்தால், சுக்கிர யோகம் ஏற்படும்.
இது கோடியில் ஒருவருக்கு தான் ஏற்படும் என்றாலும், அப்படிப்பட்ட ஒருவர் குபேரனைப் போல செல்வச் செழிப்பைப் பெறுவார். சுக்கிரனின் பலம், லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கிறது. சுக்கிர பகவானுக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமை நாளன்று சுக்கிர ஹோரையில், சுக்கிரனை வணங்கினால் பணப் பற்றாக்குறை குறையும்.
செல்வத்தையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அந்தஸ்தையும், ஆடம்பர வாழ்வையும் கொடுக்கும் அசுரர்களின் குரு என்பதும் இதே சுக்கிரன் தான். சுக்கிரனின் அருளால் பாவங்களும் துக்கங்களும் காணாமல் போகும் என்பது உண்மையென்றாலும் அசுரர்களின் குரு, சுக்கிர பகவான் ஒரு தவறு செய்து அதற்கான பிராயசித்தம் பெற்றவர் என்று புராணங்கள் சொல்கின்றன.
நேத்திரன், பிருகு, பார்க்கவன், சுகி, போகி, மகிழன், வெள்ளி, கவி, அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், மழைக்கோள் என்றெல்லாம் போற்றப்படும் சுக்கிர பகவான் தான் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் அதிபதி ஆவார்.
மேலும் படிக்க | நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!
நமது கர்ம வினைகளின் காரணமாகவே பிறப்பு என்ற விடாத தொடர் நிகழ்வு நடைபெறுகிறது என்பது இந்து மத தத்துவம். அந்த வகையில் ஒருவரின் வாழ்க்கையை முடிவு செய்யும்போது, நவகிரகங்கள், ஜாதகத்தில் அமைந்திருப்பதன் அடிப்படையில் வாழ்க்கை அமையும். இறைவனை வேண்டுவதாலும், பரிகாரங்களை செய்வதும், பூர்வஜன்ம வினைகளின் அசுபப் பலன்களைக் குறைத்து, நல்லதை நடக்கச் செய்யும்.
பொதுவாக, ஒருவரின் ஜாதகத்தில், சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும், பாவ கிரகங்களின் பார்வை இருந்தாலும் மோசமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிரனின் நீச்சம் பெற்றிருந்தால் பிரச்சனைகள் இருக்கும்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியான சுக்கிரன் கிழக்கு திசைக்கு அதிபதியாவார். வெண் தாமரையை மலராகவும், வெண்ணிற ஆடையையும் அணியும் சுக்கிரன் என்ன பாவம் செய்தார் அதற்கு என்ன பரிகாரம் செய்தார் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தபோது அசுர குருவான சுக்கிரன் மகாபலி கொடுக்கும் தானத்தைத் தடுத்தார். வாமனப் பெருமாளின் அவதார நோக்கத்திற்கு இடையூறு செய்த அசுர குரு, தனது பாவம் நீங்க சிவபெருமானை வணங்கி வழிபட்டு, பாவம் நீங்கி, பல வரங்களைப் பெற்றார். அதன்பிறகே, அவர் அனைவருக்கும் நன்மைகளை வழங்கும் தேவகிரகமாக மாறினார்.
அதன்பிறகே நவகிரகங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்க மாறிய சுக்கிரன் மட்டுமே அனைத்து லக்னங்களிலும் கேந்திரங்களிலும்ஆட்சி அல்லது உச்சம் பெறுவார். வம்ச விருத்தி, தாம்பத்திய சுகத்திற்கும் அதிபதியாய் இருப்பவர் களத்திரகாரகன் சுக்கிரன் தான் சுக்கிரன் உச்சம் பெற்றால் வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.
மேலும் படிக்க | குலதெய்வ சாபத்திற்கு தானமே பரிகாரமாக மாறுமா? தெய்வ தோஷத்திற்கான பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ