ஜூலை மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம். இந்த நேரத்தில் பல பெரிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றனர். இந்த ராசி மாற்றத்தின் பலன் நாடு மற்றும் உலகம் முழுவதும் தென்படும்.
அந்த வகையில் ஜூலை 12 ஆம் தேதி அன்று, சனி பகவான் அதன் சொந்த ராசி அடையாளமான மகரத்தில் வக்ர பெயர்ச்சி அடைவார். அதேபோல் ஜூலை 13 ஆம் தேதி மிதுன ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். ஜூலை 16 ஆம் தேதியில் சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார். அதன்படி இந்த கிரக நிலைகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை, கெடுதல் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-
மேலும் படிக்க | Weekly Horoscope: இந்த 4 ராசிக்காரர்கள் ஜூலை 10 வரை கவனமா இருக்கணும்
இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்-
பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக, ஜூலை மாதம் ஐந்து ராசிக்காரர்களுக்கு மட்டுமே வரப்பிரசாதமாக இருக்கும். அந்த ராசிகள் "மேஷம், மகரம், சிம்மம், மிதுனம் மற்றும் கும்பம்" ஆகும். இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் போது புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய திட்டத்தில் முதலீடு செய்து லாபம் பெறலாம்.
இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்-
விருச்சிகம், கன்னி, கடகம், துலாம் ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கலாம். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த ராசிக்காரர்கள் மீது குறைந்த அளவு தாக்கம் இருக்கும்
கிரகங்களின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். அதன்படி தனுசு, ரிஷபம், மீனம் ராசிக்காரர்கள் இதில் அடங்குவர். இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சமாநிலையாக இருக்கப் போகிறது. இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
இந்த ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பொற்காலம்
* மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
* சிம்மம்- ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
* தனுசு- தனுசு ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் நிதிப் பலன்களைப் பெறலாம். இந்த நேரத்தில், நீங்கள் திடீரென்று பண ஆதாயங்களின் தொகையைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR