Doctor Performing Vasectomy On Himself : சமூக வலைதளங்களின் எழுச்சிக்கு பிறகு, மக்கள் செய்யும் வித்தியாசமான விஷயங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. மிகவும் வித்தியாசமான விஷயங்களும், சமூகத்தால் முன்னர் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயங்களும் கூட, ஒரு வைரல் வீடியோவாக மாறினால் அது சகஜமாகி விடுகிறது. ஒரு சில இயல்பான விஷயங்கள், இணையத்தில் ட்ரெண்டாக, தாங்கள் வேண்டுமென்றே வைரலாக வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிலர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படி, ஒரு மருத்துவர் வெளியிட்டிருக்கும் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
Chen Wei-nong என்ற தைவான் மருத்துவர்தான் இந்த சம்பவத்தை செய்திருக்கிறார். இவர், தனது மனைவியை சர்ப்ரைஸ் செய்வதற்காக, இந்த அறுவை சிகிச்சையை அவரே அவருக்கு செய்து கொண்டிருக்கிறார். தனது மனைவி இனி குழந்தைகள் வேண்டாம் என கூறியதால் இந்த விஷயத்தை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
வேறு யாரேனும் இந்த அறுவை சிகிச்சையை தனக்கு செய்தால், அதனால் தனக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்று யோசித்து இப்படி தனக்கு தானே இந்த சிகிச்சையை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ, தற்போது சுமார் 2 மில்லியன் வியூஸ்களை தாண்டியிருக்கிறது. இந்த வீடியோ 61,000 லைக்ஸ்களை கடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, மயக்க மருந்து செலுத்திக்கொண்டும் அவர் அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்ட பிறகு, மறுநாள் காலை தான் எப்படி உணர்தேன் என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த மருத்துவரின் வீடியோ பலரது மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஒரு சிலர், இதை முட்டாள்தனம் என்று கூற, ஒரு சிலர் இதை பார்ப்பதற்கே பயமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க |ரொம்ப பசிக்குது..வீட்டில் இருந்த அரிசி மூட்டையை சூரையாடிய யானை! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ