திரிஷாவின் பிறந்தநாள்: டிவிட்டரில் வாழ்த்து மழை!

நடிகை திரிஷா இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவிற்கு கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

Last Updated : May 4, 2018, 02:42 PM IST
திரிஷாவின் பிறந்தநாள்: டிவிட்டரில் வாழ்த்து மழை! title=

நடிகை திரிஷா இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவிற்கு கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

மற்றொருபுறம் ரசிகர்கள் #HappyBirthdayTrisha, #HBDSouthQueenTrisha என்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி டிவிட்டரில் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

தமிழ், தெலுங்கு திரையுலகில் நம்பர் 1 நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 13ல் அமீர் இயக்கத்தில், சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக இவர் அறிமுகமானார். தொடர்ந்து லேசா லேசா, 2003ல் விக்ரம் ஜோடியாக சாமி படத்தின் வெற்றி திரிஷாவை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. பின் 2004ம் ஆண்டு விஜய்யின் 'கில்லி' படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவிற்கு கோலிவுட் நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தற்போது நடிகை திரிஷா விஜய் '96' கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, படங்களில் நடித்து வருகிறார். 

Trending News