புதுடில்லி: Maggi சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? அனைத்து உள்ளங்களையும் ஒன்றிணைக்கும் பல விஷயங்களில் Maggi-யும் ஒன்றாகும். இப்போது மேகி பிரியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. திருமண உணவு மெனு பட்டியலில் Maggi நுழைந்துள்ளது. ஆம்!! அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
தொற்றுநோயின் (Pandemic) காரணமாக உலகம் முழுதும், திருமணங்களில் விருந்தினர் பட்டியல் குறைந்துள்ளது. விருந்தின் மெனுவும் வெகுவாக மாறியுள்ளது. லாக்டௌனில் தங்களின் பிரியமான உணவுகளாக மாறிப்போன பலவித உணவுகளை மக்கள் தங்கள் திருமண மெனுவில் சேர்த்து வருகின்றனர். இதில் Maggie-யும் சேர்ந்துள்ளது.
சமீபத்திய ஒரு திருமணத்தில், ஒரு மேகி உணவு கவுண்டரின் படத்தைப் பார்த்த நெட்டிசன்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. 2 நிமிடத்தில் தயார் செய்யப்படும் இந்த ருசியான நூடுல்சை யாரால் தான் பாராட்டாமல் இருக்க முடியும்? இந்த படத்தை சௌம்யா லக்கானி என்ற பத்திரிகையாளர் தனது உறவினரின் திருமண வரவேற்பின் போது எடுத்தார். பின்னர் அவர் இதை தனது ட்விட்டர் (Twitter) அகௌண்டில் பகிர்ந்தார்.
I love my cousin for being so thoughtful & ensuring there is a Maggi counter at her wedding tonight pic.twitter.com/Yu3ObLEYMf
— Somya Lakhani (@somyalakhani) January 18, 2021
ALSO READ: காதலுக்கு கண்ணு மட்டுமா இல்ல, வயசும் இல்லை; 36 வயது வித்தியாசத்தில் மலர்ந்த காதல்!
"உணவு மெனுவைப் பொறுத்தவரை இப்படி வித்தியாசமாக யோசித்ததற்காக நான் என் உறவினரை மிகவும் பாராட்டுகிறேன். தனது திருமணத்தில் ஒரு மேகி கவுண்டர் இருப்பதை அவர் உறுதி செய்தார்” என்ற தலைப்புடன் அவர் புகைபப்டத்தைப் பகிர்ந்துள்ளார். வைரல் ஆன இந்த புகைப்படத்தில், பல மேகி பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் மேகியை சமைத்துக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
புகைப்படத்துடன் பகிரப்பட்ட அந்த ட்வீட் சில நிமிடங்களில் வைரலாகி (Viral) ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
ALSO READ: COVID-19 Museum: கொல்கத்தாவில் கூடிய விரைவில் வருகிறது கொரோனா அருங்காட்சியகம்
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடித்தமான Maggi திருமண உணவில் சேர்க்கப்பட்டதை நெடிசன்கள் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதைக் காணலாம்.
This should be normalised.
— bharat subramanian (@bharat4293) January 19, 2021
#Nostalgia served hot !
This took me back to school days where #Maggi counters were organised on special events.— Ravi Kumar (@ravjnkr) January 22, 2021
That is called thinking out of box....Or maybe the bride wanted to eat maggi that night
— Su ki (@su2417) January 22, 2021