ஒரே மாதிரி இருக்கும் 2 போஸ்டர்கள்! லவ் மேரேஜ் போஸ்டரில் இதை கவனிச்சீங்களா?

Love Marriage Poster Jaya Jaya Jaya Hey Poster Looks Alike : சமீபத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ் பட போஸ்டர் வெளியானது. இதை பார்ப்பதற்கு மலையாள படமான ஜெய ஜெய ஜெய ஹே போஸ்டர் போல இருப்பதாக கூறப்படுகிறது.

Written by - Yuvashree | Last Updated : Feb 13, 2025, 06:23 PM IST
  • விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்
  • லவ் மேரேஜ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
  • 2 போஸ்டரும் ஒரே மாதிரி இருக்கே..
ஒரே மாதிரி இருக்கும் 2 போஸ்டர்கள்! லவ் மேரேஜ் போஸ்டரில் இதை கவனிச்சீங்களா? title=

Love Marriage Poster Jaya Jaya Jaya Hey Poster Looks Alike :அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள  'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி படப் புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

தமிழ் திரை இசையின் கரண்ட் சென்சேஷன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி கவனிக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஸ்டார்' படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ( Rise East Entertainment)  நிறுவனம் - அஸ்யூர் பிலிம்ஸ் ( Assure Films) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இயக்குநர் சண்முக பிரியன் - 'நோட்டா', ' எனிமி ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். மற்றும் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 
 
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லவ் மேரேஜ்' தயாராகிறது.  தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது''என்றார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகன்- நாயகி மற்றும் கேரக்டர்களின்   தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

ரெண்டுமே ஒரே மாதிரி இருக்கே..

இதை பார்த்தவர்கள், பேசில் ஜோசஃப் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெய ஜெய ஜெய ஹே படத்திட்ன் போஸ்டர் போல இருப்பதாக கூறி வருகின்றனர். 

இது குறித்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | வணங்கான் vs கேம் சேஞ்சர்! இரண்டில் எது நல்லாயிருக்கு? பொங்கலுக்கு எதை பார்க்கலாம்?

மேலும் படிக்க | காதலர் தினத்தில் ஓடிடியில் வெளியாகும் 11 படங்கள்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News