டாப் 10 கள்ளக்காதல் நாடுகள்!! லிஸ்டில் இந்தியா இருக்கா?

Top 10 Infidelity Countries In The World : உலகில் இருப்பதிலேயே எந்தெந்த நாடுகள் கள்ளக்காதல் செய்வதில் எந்தெந்த நாடுகள் டாப் இடத்தில் இருக்கின்றன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Feb 13, 2025, 03:51 PM IST
  • திருமணம் மீறிய உறவில் இருக்கும் பிற நாடுகள்!!
  • டாப் 10 நாடுகள் எவை?
  • இந்தியா லிஸ்டில் இருக்கா?
டாப் 10 கள்ளக்காதல் நாடுகள்!! லிஸ்டில் இந்தியா இருக்கா? title=

Top 10 Infidelity Countries In The World : காதல் என்பது புனிதமானது என்று சொன்னது அந்த காலம், காதலா, ஐயோ கிரிஞ்ச்!! என்று ஒதுங்கி ஓடுவது இந்த காலம். பெரும்பாலானவர்கள் இப்படி இல்லை என்றாலும் தற்போதுள்ள இளம் தலைமுறையினர் அப்படி இருக்கின்றனர். அதிலும், திருமண உறவில் இருப்பவர்கள் அந்த உறவுக்கு மீறிய இன்னொரு உறவில் இருப்பதை தவறே இல்லை என்று கருதுகின்றனர். உலக நாடுகள் பலவற்றில் ‘ஓபன் மேரேஜ்’ எனப்படும் கலாச்சாரம் புதிய ட்ரெண்டாகவே மாறிவிட்டது. பெரும்பாலும் மேலை நாடுகளான அமெரிக்கா அல்லது அதனை சுற்றியிருக்கும் நாடுகளில்தான் இது போன்ற விஷயங்கள் நடக்கும் என்பதாக பலர் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், அந்த நாடுகளை தாண்டி சில நாடுகள் இந்த விஷயத்தில் முன்னோடியாக திகழ்கின்றன. எந்தெந்த நாடுகளில் இந்த கள்ளக்காதல் கலாச்சாரம் டாப்பில் இருக்கிறது தெரியுமா? இதோ இங்கு பார்ப்போம்.

10.அமெரிக்கா:

பல உலக நாடுகளில் டெக்னாலஜி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் முன்னோடியாக இருக்கிறது அமெரிக்கா. அதிலும் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ எனும் முழக்கம் அங்கு ஒலித்து வருகிறது. இந்த நாட்டில் ஆன்லைன் டேட்டிங் ஆப் வழியாக பலர் கள்ளக்காதல் தொடர்பில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

9.UK:

இந்த இடத்தில் இருக்கும் நாடுகளில் இருக்கும் மக்கள் பலர் சமீப சில நாட்களாக திருமணம் மீறிய பந்தத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் டேட்டிங் ஆப்களின் மூலம் இது போன்ற உறவுகளை தொடங்குவதாக ஒரு தரவு தெரிவிக்கிறது

8.பெல்ஜியம்:

சாக்லெட்டுகளுக்கு பெயர் போன பெல்ஜியம் இப்போது கள்ளக்காதலுக்கும் பெயர் போன நாடாக மாறிவிட்டது. உலக நாடுகளிலேயே, இந்த நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

7.நார்வே:

சுற்றுலா பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும் நார்வேயில், திருமணமானவர்கள் வேறு உறவில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

6.ஸ்பெயின்:

இந்த நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசங்களும், கடற்கறைகளும் நிறையவே நிரம்பியிருக்கின்றன. நேர்பட பேசும் மக்கள் நிரம்பியிருக்கும் நகரம், ஸ்பெயின். ஆனால், இங்கும் பலர் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Cheating

5.இத்தாலி:

இத்தாலி நாடு, ரொமான்சுக்கும் காதலுக்கும் பஞ்சம் இல்லாத நாடாகும். இந்த இடத்தில், பல ஆண்டுகளாக மக்கள் தங்கள் பார்ட்னருக்கு தெரிந்தும் தெரியாமலும் திருமணத்திற்கு மீறிய பந்தத்தில் ஈடுபட்டு வருகின்றனராம்.

4.ஃப்ரான்ஸ்:

இங்கிருக்கும் அழகு பாரிஸ் கோபுரம் முன்பு பல காதலர்கள் நின்று முத்தம் கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் அப்படி கொடுத்திருப்பதில் யார் உண்மையான காதலர்கள் என தெரியவில்லை. காரணம், இங்கிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு திருமணம் அல்லது காதல் உறவை மீறி இன்னொரு உறவில் இருப்பது என்பது மிகவும் கேசுவலாம்.

3.ஜெர்மனி:

பலதரப்பட்ட உணவும் கலாச்சாரமும் நிறைந்திருக்கும் ஜெர்மனியில், கள்ளக்காதல் உறவுகளும் ரொம்ப சகஜமாம். இங்கிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் திருமணத்திற்கு மீறிய டேட்டிங் உறவில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

2.டென்மார்க்:

அழகான தீவுகள் நிறைந்த டென்மார்க், திருமணத்திற்கு மீறிய உறவுகளுக்கும் பெயர் போனதாம். இங்கிருப்பவர்கள், தாங்கள் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதை மறைப்பது கூட இல்லையாம்.

1.தாய்லாந்து:

இந்த நாட்டை “புன்னகை தேசம்” என்றே பலர் கூறுகின்றனர். இங்கிருக்கும் மக்கள் அனைவருமே தங்கள் நாட்டிற்கு வருபவர்களிடம் சிரிப்புடனும் நட்புடனும் பழகுவராம். இங்கு பாலியல் தொழிலுக்கு மட்டும் சில இடங்கள் இருக்கின்றனவாம். அதில், பெண்கள் ஆண்கள் மட்டும் பாலியல் தொழில் செய்வதில்லை. பிற பாலினத்தவர்கள், தங்களுக்கு என்ன பாலினம் என கண்டு பிடிக்க முடியாதவர்கள் என பலர் பாலியல் தொழில் செய்கின்றனர். இதனால், இங்கிருப்பவர்கள் மிகவும் சகஜமாகவே திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபடுகின்றனராம்.

இந்தியாவிலும் கள்ளக்காதல் பிரச்சனைகள் இருந்தாலும், பிற நாடுகள் அளவிற்கு இல்லாததால், இந்த லிஸ்டிலும் நம் நாடு இல்லை.

மேலும் படிக்க | இந்தியாவின் ஹை-டெக்கான 7 மாநிலங்கள்! தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

மேலும் படிக்க | இந்தியாவின் டாப் 8 பணக்கார மாநிலங்கள்! தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News