PM Kisan Samman Nidhi Yojana: நம் நாட்டின் உயிர்நாடியாக இருப்பது விவசாயம். நம் நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் தெய்வங்களாக இருப்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கான பல வித நலத்திட்டங்களை அரசு நடத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமானதாகவும் பிரபலமானதாகவும் உள்ளது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
விவசாயிகளுக்கான இந்த பிரத்யேக திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. . இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசாங்கம் ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது. இந்த ரூ.6 ஆயிரம் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தில் 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
அடுத்த தவணை, அதாவது பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 19வது தவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தவணைத் தொகை பிப்ரவரி கடைசி வாரத்திற்குள் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகின்றது. இந்த தவணையை அரசாங்கம் பிப்ரவரி 26, 2025 அன்று வெளியிடலாம்.
எனினும், அனைத்து விவசாயிகளும் இந்தத் தவணையின் பலனைப் பெற மாட்டார்கள். முதலில் விவசாயிகள் சில முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டும். தவணை வெளியிடப்படும் தேதி குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. தவணைத் தொகையை பெற விரும்பும் விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கே காணலாம்.
PM Kisan: முதலில் e-KYC-ஐ முடிக்க வேண்டியது அவசியமாகும்
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா தவணையின் பலனைப் பெற விரும்பினால், முதலில் e KYC பணிகளைச் செய்து முடிக்க வேண்டும்.
- இதற்கு, விவசாயிகள் முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- இங்கே முகப்புப் பக்கத்தில், விவசாயிகள் ‘Farmer Corner' பிரிவில் eKYC என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு, eKYC பக்கத்தில் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
- அதன் பிறகு தேடல் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- பின்னர் நீங்கள் OTP-ஐ உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் e-KYC க்குப் பிறகு, ஒரு செய்தி தோன்றும்.
- இதற்குப் பிறகு உங்கள் e-KYC வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும்.
வங்கிக் கணக்குடன் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 19வது தவணையைப் பெற விரும்பினால், முதலில் உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இரண்டு பணிகளையும் செய்து முடிக்க, நீங்கள் வங்கிக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களின் உதவியை பெறலாம். இவற்றை செய்துவிட்டால், 19வது தவணைத் தொகையை பிரச்சனை இல்லாமல் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ