தமிழக பட்ஜெட் 2025: ஓய்வூதியம் குறித்து வருகிறதா அப்டேட்? எகிறும் எதிர்பார்ப்பு!

Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025 விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் மக்களுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimmai Thogai) அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 
1 /8

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் (Union Budget 2025) கடந்த பிப். 1ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

2 /8

கடந்த பிப். 10ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (TN CM MK Stalin) தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வாழும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவது குறித்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

3 /8

மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் (TN Cabinet Meeting) 7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதன்மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

4 /8

உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவு படுத்தப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் அமைய உள்ள தொழிற்சாலைகளின் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

5 /8

இவை மட்டுமின்றி, வரும் 2025-26 பட்ஜெட்டில் (TN Budget 2025) இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. வரும் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

6 /8

இந்த பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இதுதான் இந்த ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட்டாக இருக்கும். எனவே பல்வேறு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.

7 /8

மேலும், இந்த பட்ஜெட்டியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வருகின்றன. கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. 

8 /8

கடந்த சில நாள்கள் முன்னர் தான், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் அடங்கிய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழுவுக்கு 9 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.