காதலர் தினத்தில் ஓடிடியில் வெளியாகும் 11 படங்கள்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?

Latest OTT Releases This Week Valentines Day 2025 : காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சில படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவற்றை, எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Latest OTT Releases This Week Valentines Day 2025 : பிப்ரவரி 14ஆம் தேதியான நாளை காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, ஓடிடியில் பல காதலர் தின திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1 /7

ஜெயம் ரவி-நித்யா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதனை காதலர் தினத்தை முன்னிட்டு உங்கள் அன்புக்குரியவருடன் சேர்ந்து பார்க்கலாம்.

2 /7

மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன படம், மார்கோ. உன்னி முகுந்தன் நடித்திருக்கும் இந்த படத்தை பிப்ரவரி 14ஆம் தேதியன்று சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம்.

3 /7

இந்தியில் உருவாகியிருக்கும் தொடர் ப்யார் டீசிங். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த தொடர் ஜீ 5 தளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. 

4 /7

மலையாளத்தில் வெளியான ஜாலியான படம், மனோராஜ்யம். இந்த படத்தை மனோரமா மேக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

5 /7

யாமி  கௌதம், பிராதிக் காந்தி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தூம் தாம். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

6 /7

காதல் ஹாலிவுட் படம், My Fault London. இந்த படத்தை ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

7 /7

மேற்கூறியவை மட்டுமன்றி இன்னும் சில படங்களும் ஓடிடியில் வரும் பிப்., 14-ஐ முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? விஜயநாடா-கன்னடம்-நம்ம ஃப்ளிக்ஸ் ஜெனரேஷன்ஸ் ஆஜ் கல்-இந்தி-ஹாட்ஸ்டார் இஷ்க் இண்டரப்டட்-ஹாட்ஸ்டார் லவ் லைஃப் லாஃப்டே-இந்தி-ஹாட்ஸ்டார் பாபி அவுர் ரிஷி கி லவ் ஸ்டோரி-இந்தி-ஹாட்ஸ்டார் ஐ ஆம் மேரீட் பட்-சீன மொழி-நெட்ஃப்ளிக்ஸ் தொடர் மெலோ-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர் 500000 ஃப்ர்ஸ்ட் டேட்ஸ்-ஆங்கிலம்-ப்ரைம் தொடர் டெத் பிஃபோர் தி வெட்டிங்-போலிஷ்-நெட்ஃப்ளிக்ஸ் ஹனி மூன் க்ரேஷர்-ஃப்ரெஞ்ச்-நெட்ஃப்ளிக்ஸ் சர்வைவிங் ப்ளாக் ஹாக் டவுன்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர் மதுரை பையனும் சென்னை பொண்ணும்-தமிழ்-ஆஹா தொடர் தி மோஸ்ட் பியூடிஃபுல் கேர்ள் இன் தி வர்ல்ட் -இந்தோனேசிய தொடர்-நெட்ஃப்ளிக்ஸ்