என் தமிழ் - காளையுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 14, 2022, 03:34 PM IST
  • தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா
  • காளையுடன் வந்த சூர்யா
  • வாடிவாசல் காளையுடன் சூர்யா
என் தமிழ் - காளையுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சூர்யா title=

நடிகர் சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார். பாலாவுடன் நீண்ட வருடங்கள் கழித்து சூர்யா இணைந்திருப்பதாலும், வெற்றிமாறனுடன் முதல்முறை இணைந்திருப்பதாலும் இப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | 10,000 தியேட்டர்களுக்கு மேலாக ரிலீஸாகும் கேஜிஎப் 2 - முதல் நாளில் இத்தனை கோடி உறுதியா?

பாலா பட ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடந்துவருகிறது. வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்துக்கான டெஸ்ட் ஷூட் நடைபெற்றது. பாலா பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

Surya

இந்நிலையில் இன்று தமிழர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் சூழலில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

அந்த வீடியோவில் வாடிவாசல் காளையுடன் வரும் சூர்யா, “என் தமிழ்.... அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” என கூறுகிறார். அனைவரும் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கூறிவரும் சூழலில் சூர்யாவின் இந்த வாழ்த்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | பீஸ்ட் ஹிட்டா ஃப்ளாப்பா... தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News