VJ Ramya Tips For Belly Fat Reduction : வயிறு தொங்க தொங்க தொப்பை இருப்பது என்பது, உலக மக்கள் அனைவரிடையேயும் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதை குறைப்பது எப்படி என்றும், உடலை ஃபிட்டாக வைத்திருப்பது எப்படி என்றும் இணையத்தில் பெரிதாக தேடியிருப்போம். இதில், ஒரு சில டிப்ஸ் நமக்கு உதவியிருக்கும், ஒரு சிலருக்கு உதவியிருக்காது. தற்போது, தொகுப்பாளர் விஜே ரம்யாவும் சில டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார்.
ரம்யாவின் டிப்ஸ்:
விஜே ரம்யா, தொப்பையை குறைக்க மூன்று உணவுகளை பரிந்துரைக்கிறார். அவை அனைத்துமே நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய சிம்பிளான உணவுகள்தான்.
வாழைப்பழம்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை தங்களது டயட்டில் வாழைப்பழத்டில் பொட்டாசியம் இருப்பதால் அது வயிறு முழுமையாக இருப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. அது மட்டுமன்றி, வாழைப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதாம். இதனால், சாப்பிட்டவுடன் உடனடியாக பசி ஏற்படும் உணர்வும் இருக்காது. எனவே, உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் அதற்கான உணவாக வாழைப்பழத்தை சாப்பிடலாம். அதே போல செரிமானத்திற்காக இரவு உணவுக்கு பின்னரும் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம் என கூறுகிறார், விஜே ரம்யா.
கிரீன் டீ:
உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த, கிரீன் டீ பயன்படுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் கிரீன் டீ உதவுகிறது. இதனால், காலையில் கிரீன் டீ குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது என கூறும் ரம்யா, நார்மல் டி-காஃபி குடிப்பதற்கு பதிலாக இதனை குடிக்கலாம் என்கிறார். கிரீன் டீயை உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் எடுத்துக்கொள்வது, அது உடலில் இருக்கும் கலோரியை குறைக்க உதவுவதோடு, உடலுக்கு கூடுதல் நன்மையையும் அளிக்கிறது.
முட்டை:
தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், யோசிக்காமல் முட்டையை கூட தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் என கூறுகிறார் ரம்யா. முட்டையில் இருக்கும் புரத சத்து, நம் வயிறை முழுமையாக உணர வைக்கும். அதே போல, முட்டையில் கோலின் என்ற வேதிப்பொருளும் இருக்கிறதாம். இது, தேவையற்ற கொழுப்பை கரைய வைத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறதாம். முட்டையை சாப்பிட நினைப்பவர்கள், காலையில் முட்டையை அவித்து சாப்பிடலாம். இதை தவிட ஆம்லெட் ஆகவும் செய்து சாப்பிடலாம். இதனால், பசி உணர்வு குறைந்து, நாம் அதிகமாக சாப்பிடாலம் இருக்கலாம்.
மேற்கூறிய பொருட்களை சரியான விதத்தல் எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சியை சரியாக செய்தாலே விரைவில் தாெப்பை குறையலாம். அதே போல, எண்ணெய் உணவுகளையும், அதிக சர்க்கரை போட்ட உணவுகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டியது நல்லது. ஒரு பக்கம் டயட் இருந்து கொண்டு, இன்னொரு பக்கம் உடற்பயிற்சிகளை செய்து கொண்டு, அதற்கிடையில் துரித உணவுகளையும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியாது.
உடற்பயிற்சி ரொம்ப முக்கியம்:
தொப்பையை குறைக்க வேண்டும் என்றாலும் சரி, உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தாலும் சரி, அதற்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, கார்டியோ மற்றும் Abs உடற்பயிற்சிகள்தான், இதற்கு பெரிதும் உதவும். இவற்றுள் மௌண்டெயின் க்ளைம்பர்ஸ், ப்ளாங்க்ஸ், ரஷ்ஷியன் ட்விஸ்ட், பைசைக்கிள் க்ரஞ்சஸ் உள்ளிட்டவை அடங்கும். இது தவிர, வெயிட் லிஃப்டிங் செய்வது, நடைப்பயிற்சி ஆகியவையும் உதவலாம்.
மேலும் படிக்க | 1 நாளில் 2 கிலோ எடை குறைக்கலாம்! VJ ரம்யா கூறும் டிப்ஸை கேளுங்க..
மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ