Reason Why Jason Sanjay Went To GK Mani Wedding : பாமக கௌரவ தலைவர் ஜி.கே.அன்புமனியின் இல்லத்திருமண விழாவிற்கு, நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
Reason Why Jason Sanjay Went To GK Mani Wedding : தமிழகத்தில் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளவர், நடிகர் விஜய். அடுத்த ஆண்டில், முழு நேரமாக அரசியலில் களம் காண இருக்கும் இவர், தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் முதன் முதலாக ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தந்தை இல்லாமல் தனிச்சையாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இவர், நேற்று ஜி.கே.மணியின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த நிலையில், அவர் ஏன் அங்கு சென்றார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
தமிழ் சினிமாவிற்கு புதிய இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் ஜேசன் சஞ்சய். விஜய்யின் மகனான இவர், சமீபத்தில்தான் வெளிநாட்டில் திரைப்படக்கலை பயின்று விட்டு தாயகம் திரும்பினார்.
ஜேசன் சஞ்சய், நேற்று பாமக கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணியின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவரது தந்தை விஜய் அரசியல் கொள்கைகளை அறிவித்து ஆச்சரியத்தை கொடுத்திய நிலையில், மகன் எப்படி இந்த கட்சியை சேர்ந்தவரின் திருமண விழாவிற்கு வந்தார் என்ற விவாதம் எழுந்தது.
இந்த திருமண விழாவில் ஜேசன் மட்டுமல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் சூரி, தர்ஷன் ஆகியோர் போட்டோவிற்கு போஸ் கொடுத்த காட்சி
இந்த விழாவில் விஜய் சேதுபதி கூட கலந்து கொண்டார். இதில், ஜேசன் கலந்து கொள்ள ஒரு காரணமும் இருக்கிறது.
ஜேசன் சஞ்சய், முதன்முதலாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் இணை தயாரிப்பாளராக இருக்கிறார், ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரன்.
இதன் காரணமாகத்தான், ஜேசன் சஞ்சய் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.