ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர்தான்! பிசிசிஐ புதிய முடிவு!

Rohit Sharma: சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்ததும் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய கேப்டனை பிசிசிஐ தற்போது தேர்வு செய்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Feb 27, 2025, 11:02 AM IST
  • ரோஹித், விராட் கோலி ஓய்வு.
  • புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட வாய்ப்பு.
  • பிசிசிஐ எடுத்துள்ள முக்கிய முடிவு.
ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர்தான்! பிசிசிஐ புதிய முடிவு!  title=

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்திய அணியின் அனைத்து வடிவ போட்டிகளுக்கும் ஒரே கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தது பிசிசிஐ. அவரது தலைமையில் இந்திய அணி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வெற்றி பெற்றது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் பிறகு அடுத்த ஒரு நாள் உலக கோப்பை போட்டி 2027 ஆம் ஆண்டில் தான் நடைபெற உள்ளது. மேலும் அதே ஆண்டில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியும் நடைபெறுகிறது. இதனால் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு தங்களது ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிங்க: 36 வயதிலும் பிட்டாக இருக்க விராட் கோலி பின்பற்றும் 5 வழிமுறைகள் இது தான்!

புதிய கேப்டன் யார்?

இதனால் சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் இந்திய அணிக்கு அனைத்து வடிவத்திற்கும் ஒரு புதிய கேப்டனை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டி20 போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருந்து வருவதால், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரே கேப்டனை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. சாம்பியன்ஸ் தொடர் முடிந்த ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. அதன் பிறகு இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி புதிய கேப்டன் உடன் களமிறங்கும் என்று பிசிசிஐ  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் கேப்டன்ஷிப் ரேசில் தற்போது இரண்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் சுப்மான் கில் ஆகிய இருவரில் ஒருவர தான் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் பும்ராவிற்கு பணிச்சுமையை குறைக்கும் வகையில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டன்சியை கொடுக்கலாமா என்றும் ஒரு பேச்சு வார்த்தை நிலவி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மான் கில் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியின் முடியை பொறுத்து கேப்டன்சி முடிவுகளிலும் மாற்றங்கள் இருக்கலாம்.

சுப்மான் கில்

சுப்மான் கில் தற்போது ஐசிசியின் ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். சமீபத்திய டி20 போட்டிகளில் சூர்யா குமார் யாதவ் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். ஐபிஎல் 2025 போட்டியிலும் ரன்கள் அடிக்க தவறினால் டி20 கேப்டன்சியிலும் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிங்க: பாபர் அசாம் தனது நண்பர்களை அணியில் சேர்த்து கொண்டார் - சேஷாத் கடும் சாடல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News