தினமும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து நெட்வொர்க் ஆக இருக்கும் இந்திய ரயில்வே, ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு கருதியும், எந்தவித இடையூறும் இல்லாமல் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையிலும், பல விதிகளை கொடுத்துள்ளது. இது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதன் மூலம், பல விதமான சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
டிக்கெட் விதிகள்
ரயில்வே கவுண்டரில் டிக்கெட் புக் செய்யும் காலகட்டம் மலையேறிவிட்டது. பெரும்பாலானோர் இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி தளத்தில் தான் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் உங்கள் டிக்கெட் உடன், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணம் ஒன்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அடையாள ஆவணம் இல்லையென்றால், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதப்பட்டு, ரயிலில் இருந்து இறக்கிவிட டிக்கெட் பரிசோதகருக்கு உரிமை உண்டு.
லக்கேஜ் விதிகள்
விமான பயணம் போலவே ரயில் பயணிகளுக்கும் லக்கேஜ் கொண்டு செல்வது தொடர்பாக, விதிகள் உள்ளன. ஏசி வகுப்பு பெட்டியில் பயணிப்பவர்கள், அதிகபட்சமாக 70 கிலோ எடுத்துச் செல்லலாம். ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பவர்கள், 40 கிலோ எடையுள்ள சாமான்களை எடுத்துச் செல்லலாம். இந்த அளவை மீறினால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
ரயிலில் உள்ள கீழ் மற்றும் நடு பெர்த் பயன்படுத்துவது தொடர்பான விதிகள்
இரவு நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம். ஆறு மணிக்கு பிறகு நடு இருக்கையை கீழே இறக்குவது அவசியம். கீழ் பெர்த்தில் பயணிக்கும் பயணிகள், இரவு 10 மணிக்கு முன்பு அல்லது காலை 6:00 மணிக்கு பிறகு தங்கள் பெர்த்தில் தூங்க இயலாது. விஷயத்தில் சக பயணிக்கு இடையூறு கொடுத்தால், அவர் மீது ரயில்வே இடம் புகார் அளிக்கலாம்.
ரயில் பெட்டிகளில் உள்ள விளக்குகளை பயன்படுத்துவது தொடர்பான விதிகள்
இரவு 10 மணிக்கு பிறகு, இரவு நேரத்திற்கான விளக்குகளைத் தவிர, மற்ற விலங்குகளை எரிய வைக்க அனுமதி இல்லை. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் ரீடிங் லைட்டுகளை பயன்படுத்தலாம். ரயில் பயணிகளின் இரவு நேர தூக்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சுத்தமாக பேசுதல் அல்லது இசை கேட்டல்
சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், சத்தமாக பேசுவது, அதிக ஒலியளவில் இசைகளை ஒலிக்கச் செய்வது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். இசை கேட்பதற்கு அல்லது வீடியோ பார்ப்பதற்கு, மற்றவர்களுக்கு பிரச்சினை கொடுக்காத வகையில், இயர் ஃபோன்களை பயன்படுத்தி கேட்கலாம்.
ரயிலில் எடுத்து செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள்
பயணிகளின் பாதுகாப்பு கருதி, எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது அபாயகரமான எடுத்துச் செல்ல பயணிகளுக்கு அனுமதி இல்லை. வெடி பொருட்கள், பட்டாசுகள், பெட்ரோல், மண்ணெண்ணெய், சிலிண்டர்கள், நச்சு ரசாயனங்கள் போன்ற பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. விதியை மீறுபவர்கள் கடுமையான அபராதம் செலுத்த நேரிடலாம். சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடலாம்.
அபாய சங்கிலி பயன்படுத்துவது தொடர்பான விதிகள்
ரயிலில் உள்ள அபாய சங்கிலியை எதிர்பாராத அவசர நிலை ஏற்படும் போது தான் பயன்படுத்த வேண்டும். உடன் பயணித்த துணை, குழந்தை, முதியவர் அல்லது ஊனமுற்ற நபர் ரயிலை தவற விட்டால் அல்லது ரயிலில் ஏதும் அவசர நிலை ஏற்பட்டால் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தலாம். அதாவது ஓடும் ரயிலை சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்த உறுதியான நியாயமான காரணம் இருக்க வேண்டும்.
கேட்டரிங் சேவை தொடர்பான கட்டுப்பாடுகள்
இரவு நேரங்களில், கேட்டரிங் மற்றும் பிற விற்பனையாளர்கள், ரயில் பெட்டிக்குள், எதையும் விற்பனை செய்ய அனுமதி இல்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ