"ஜெய் பீம்" திரைப்பட விவகாரத்தில் தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும், படத்தை கொண்டாடியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. இந்த திரைப்படத்திற்கு நீங்கள் தரும் அன்பு என்னை திக்கு முக்காடச் செய்துள்ளது. எனக்கு ஆதரவாக துணை நிற்பவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி என நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பர்களே, #Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது. இதுபோன்று இதற்கு முன் நான் பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதுணையாக நின்றதுக்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் ஒன்றாக உறுதியாக நின்றதற்கு மனமார்ந்த நன்றி." எனப் பதிவிட்டுள்ளார்.
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us
— Suriya Sivakumar (@Suriya_offl) November 17, 2021
முன்னதகா பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்கூறும் படமாக வெளிவந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த "ஜெய்பீம்" (Jai Bhim) படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை எழுப்பியது.
ALSO READ | ஜெய் பீம் படத்தால் அடுத்த சிக்கலில் சூர்யா; 5 கோடி நஷ்ட ஈடு
அதாவது இந்த படத்தில் வில்லனாக காட்டப்பட்டுள்ள போலீஸ் கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயர் அந்தோணி சாமி என்பதை வைக்காமல், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
அதேபோல் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தததை தொடர்ந்து, படத்தில் இருந்த அந்த "காலண்டர் காட்சி" திருத்தம் செய்யப்பட்டது.
அதன் பிறகும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss), சூர்யாவை நோக்கி ஒன்பது கேள்விகள் அடங்கிய கடிதம் ஒன்றை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட விவகாரம் சூடுப்பிடிக்கத் தொடங்கியது.
ALSO READ | நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அசுரன்
அன்புமணியின் அறிக்கையை அடுத்து நடிகர் சூர்யாவும் அதற்கு விரிவான பதில் அளித்திருந்தார். இந்த விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது என நினைத்திருந்த நிலையில், வன்னியர் சங்கம் சார்பில் ரூ. 5 கோடி நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த வக்கீல் நோட்டீசில், "ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் (T. J. Gnanavel) மற்றும் படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் (Amazon Prime Video) ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி அனுப்பினார்.
அதில் ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்படி கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ALSO READ | சூர்யாவுக்கு எதிராக வன்முறை பேச்சு - பாமக மாவட்ட செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR