Weight Loss Journey: ஒவ்வொருவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை கேட்கும்போதும், அவர்களின் முயற்சிகளை கண்களால் பார்க்கும்போதும் நிச்சயம் பலருக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நம்மாலும் உடல் எடையை குறைக்க முடியும், தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொள்ள முடியும், கட்டுப்பாடான உணவுகளை சாப்பிட முடியும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை நிச்சயம் ஏற்படும்.
நீங்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவரோ, இல்லையோ நிச்சயம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். உங்கள் ஒல்லியாக இருப்பதனாலேயே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என அர்த்தம் கிடையாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
Weight Loss Journey: நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்
உடல் பருமன் பிரச்னை இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பது மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை அதிகப்படுத்தி அது வாழ்க்கை முழுவதும் தொடர்வதாக இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் மருத்துவ நிபுணரை ஆலோசித்து அதற்கேற்ப உங்களது உடல் எடை குறைப்பு செயல்பாட்டை தொடங்க வேண்டும்.
மேலும் படிக்க | இடுப்பு, தொப்பை கொழுப்பை சட்டென குறைக்கும் ஜாப்னீஸ் டிரிக்ஸ்..!
Weight Loss Journey: அனுஷ்கா சிங்கின் உடல் எடை குறைப்பு அனுபவம்
அந்த வகையில், தேர்ச்சி பெற்றி உடற்பயிற்சி வல்லுநரான அனுஷ்கா சிங் என்பவர் அவரது உடல் எடை குறைப்பு அனுபவத்தை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார். அவர் உடல் எடையை குறைப்பதில் சந்தித்த பிரச்னைகள், சிக்கல்கள், தடைகள் ஆகியவற்றை அவற்றில் பதிவு செய்திருக்கிறார். இது நெட்டிசன்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தனது உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பேசி வந்த நிலையில், தற்போது அவர் ஒரு பிரபலமாக உருவெடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
hustle._humble என்ற அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில், அனுஷ்கா சிங் தனது உடல் எடை குறைப்பு அனுபவத்தை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும் பள்ளிப் பருவத்தில் தனது உடல் பருமனாக இருந்ததாகவும், கூடைப்பந்து விளையாட தொடங்கியதில் இருந்து தான் மெலிந்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அதற்கு உடல் பலத்தை தன்னால் அதிகரிக்க இயலவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், வாரம் 7 நாள்களும் அவர் பின்பற்றிய உணவுப் பழக்கவழக்கத்தையும் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Weight Loss Journey: திங்கட்கிழமை டயட்
காலியான வயிற்றில் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிப்பாராம். அத்துடன் 5 ஊறவைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவாராம். காலை உணவில் 2 கடலை பருப்பு சீலாக்கள், 100 கிராம் துருவிய பன்னீரை எடுத்துக்கொள்வாராம். மதிய உணவுக்கு முன் 1 ஆப்பிள், அரை டீஸ்பூன் பீனட் பட்டரை சாப்பிடுவாராம். மதிய உணவாக 1 பிளேட் முழுவதும் சாலட், 50 கிராம் தயிர், 100 கிராம் டோஃபு புர்ஜி, 1 கப் பாசிப்பருப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்வாராம். மாலை உணவாக 1 சிறிய கிண்ணத்தில் வறுத்த கொண்டக்கடலை மற்றும் தேங்காய் தண்ணீரை அருந்துவாராம். இரவு உணவுக்கு 2 கடலை பருப்பு சீலாக்கள் மற்றும் வறுத்த காய்கறிகளை சாப்பிடுவாராம்.
மேலும் படிக்க | 6 மாசத்தில் 30 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை குறைக்க உதவியது எது தெரியுமா?
Weight Loss Journey: செவ்வாய்க்கிழமை டயட்
காலை எழுந்த உடன் 1 கிளாஸ் சியா விதை தண்ணீரை அருந்துவாராம். சியா விதையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலை உணவாக 40 கிராம் ஓட்ஸ், 2 டீஸ்பூன் தயிர், 4 ஸ்ட்ராபெர்ரி, ஊறவைத்த கலந்த நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவாராம். மதிய உணவுக்கு முன் 1 சிறிய கிண்ணத்தில் வேர்க்கடலை, பொறி மற்றும் தேங்காய் தண்ணீரை எடுத்துக்கொள்வாராம். மதிய உணவாக 1 பிளேட் வெள்ளரிக்காய், 80 கிராம் தயிர், 1 சிறிய கிண்ணத்தில் வறுத்த காளான்கள், 1 கடலை பருப்பு ரொட்டியை சாப்பிடுவாராம். மாலையில் பிரோட்டீன் பார் மற்றும் தேங்காய் தண்ணீரையும், இரவு உணவாக 150 கிராம் சோயா, அரிசி மற்றும் காய்கறிகளை சாப்பிடுவாராம்.
Weight Loss Journey: புதன்கிழமை டயட்
காலை எழுந்த உடன் அரை வாழைப்பழத்துடன் பிளாக் காபியை குடிப்பாராம். காலை உணவாக வேகவைத்த பயிர்கள் மற்றும் 150 கிராம் அவலை சாப்பிடுவாராம். மதிய உணவுக்கு முன் அரை தேக்கரண்டி பீனட் பட்டர் தடவிய 1 துண்டு பிரட்டை சாப்பிடுவாராம். மதிய உணவாக 1 கிண்ணத்தில் அர்ஹார் பருப்பு, வறுத்த குடைமிளகாய் மற்றும் காளான், 60 கிராம் சாதமை எடுத்துக்கொள்வாராம். மாலை சிற்றுண்டிக்கு 1 கப் தேங்காய் தண்ணீர், வறுத்த வேர்க்கடலையை சாப்பிடுவாராம். இரவு உணவாக 100 கிராம் பன்னீர் மற்றும் 1 பாசிப்பருப்பு சீலாவை எடுத்துக்கொள்வாராம்.
Weight Loss Journey: வியாழக்கிழமை டயட்
காலை எழுந்த உடன் 1 தேக்கரண்டி பெருஞ்சீரக நீரை குடிப்பாராம். காலை உணவாக சியா விதைகள் மற்றும் அரை தேக்கரண்டி பீனட் பட்டர் சேர்த்து இரவு ஊறவைத்த ஓட்ஸை சாப்பிடுவாராம். மதிய உணவாக 1 கொய்யா மற்றும் 1 கிளாஸ் மோரை அருந்தலாம். மதிய உணவுக்கு முன் 150 கிராம் ராஜ்மா மற்றும் 1 வெள்ளரிக்காய், 2 பீசன் ரொட்டியை சாப்பிடுவாராம். மாலை சிற்றுண்டிக்கு 100 கிராம் வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் இரவு உணவுக்கு 150 கிராம் பாசிப்பருப்பு, 2 பாசிப்பருப்பு சீலாக்களை சாப்பிடுவாராம்.
மேலும் படிக்க | ஜிம் போகாமல் ‘75Kgs-ல் இருந்து 55Kgs’க்கு எடையைக் குறைத்த நடிகை அபர்ணதி!
Weight Loss Journey: வெள்ளிக்கிழமை டயட்
வெறும் வயிற்றில் 100 கிராம் பப்பாளியுடன் பிளாக் காபியை அருந்துவாராம். காலை உணவாக குறைந்தளவு உப்புமா மற்றும் வேகவைத்து, வறுத்த கொண்டக்கடலையை சாப்பிடுவாராம். மதியம் உணவுக்கு முன் 4 ஸ்ட்ராபெர்ரிகளுடன், 180 கிராம் இனிப்பு சேர்க்கப்படாத யோகர்டை சாப்பிடுவாராம். மாலை சிற்றுண்டிக்கு மூலிகை தேநீருடன் 1 வறுத்த பப்பாளியை சாப்பிடுவாராம். இரவு உணவாக 150 கிராம் கொண்டக்கடலை மற்றும் பருப்பு கிச்சடியை சாப்பிடுவாராம்.
Weight Loss Journey: சனிக்கிழமை டயட்
வெறும் வயிற்றில் ஹெர்பல் டீ உடன், 1 ஆப்பிள் மற்றும் காலை உணவுக்கு 5-6 ஸ்ட்ராபெர்ரிகள், மதிய உணவுக்கு முன் கிரீன் டீயுடன் 1 கிண்ணத்தில் சோளம், மதிய உணவாக 1 சிறிய கிண்ணத்தில் அர்ஹார் பருப்பு, வறுத்த குடைமிளகாய், காளான், 60 கிராம் சாதத்தை எடுத்துக்கொள்வாராம். மாலை சிற்றுண்டியாக 1 கப் தேங்காய் தண்ணீர், வறுத்த வேர்க்கடலையை சாப்பிடுவாராம். இரவு உணவாக 100 கிராம் பன்னீர் மற்றும் 1 பாசிப்பருப்பு சீலாவை எடுத்துக்கொள்வாராம்.
Weight Loss Journey: ஞாயிற்றுக்கிழமை டயட்
காலி வயிற்றில் பிளாக் காபி அல்லது 2 ஊறவைத்த வால்நட்ஸ் மற்றும் சூடான எலுமிச்சை தண்ணீரை அருந்துவாராம். காலை உணவாக ஓட்ஸ் வாழைப்பழம் சேர்க்கப்பட்ட 2 பான்கேக்குகள், ஒரு ஸ்கூப் புரோட்டீன் பவுடர். மதிய உணவுக்கு முன் 1 புரோட்டீன் பார். மதிய உணவாக 1 கிண்ணத்தில் கொண்டக்கடலை, 100 கிராம் குயினோ (சிறுதானியம் போன்றது), 1 பிளேட் சாலட், 1 கிண்ணத்தில் வேகவைத்த உருளைக்கிளங்கை சாப்பிடுவாராம். மாலை உணவாக 1 சிறிய கிண்ணத்தில் ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவாராம். இரவு உணவுாக 250 கிராம் பாசிப்பருப்பு கிச்சடியை சாப்பிடுவாராம்.
இந்த உணவுப்பழக்கவழக்கத்தை பின்பற்றி அவர் 7 நாள்களில் 12 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அதாவது, 74 கிலோவில் இருந்து 62 கிலோவுக்கு குறைத்துள்ளார். தொடர்ச்சியான உணவுப்பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியே அவரது உடல் எடை குறைப்பக்கு காரணம் என்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் அனுஷ்கா சிங்கின் தனிப்பட்ட உணவுப்பழக்க வழக்கம். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | வெயிட் குறைக்க சிம்பிளான 4 வழிகள்! டாக்டர் ஷர்மிகா சொன்ன டிப்ஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ