ரேஷன் கார்டு இப்போது விண்ணப்பித்தால் எப்போது வரும்? முக்கிய அப்டேட்

Ration Card | ரேஷன் கார்டுக்கு இப்போது விண்ணப்பித்தால் புதிய ரேஷன் கார்டு எப்போது வரும் என தெரிந்து கொள்ளுங்கள்

New Ration Card | தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கோரி இப்போது விண்ணப்பித்தால் எப்போது கிடைக்கும் என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

1 /8

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மற்றும் அதற்கு முன்பு புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கான விண்ணப்ப பரிசீலனை கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.

2 /8

இன்னும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடர்ச்சியாக நடக்கிறது. ஜனவரி இறுதி வாரத்தில் கூட ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

3 /8

ஒருவேளை அதற்கு பிறகு விண்ணப்பித்தவர்களாக இருந்தால் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்பவர்கள் விண்ணப்பிக்கும்போது அனைத்து  ஆவணங்களும் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

4 /8

ஒருவேளை அதற்கு பிறகு விண்ணப்பித்தவர்களாக இருந்தால் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்பவர்கள் விண்ணப்பிக்கும்போது அனைத்து  ஆவணங்களும் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

5 /8

வாடகை வீட்டில் இருந்தால் வாடகை ஒப்பந்தம், மின் கட்டண பில் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சிறிய தவறுகூட உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

6 /8

ரேஷன் கார்டு இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் இதுவரை ரேஷன் கார்டு வாங்காதவர்கள் கூட இப்போது புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

7 /8

அதனால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது அரசு தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதனால் அதிகாரிகள் புதிய ரேஷன் கார்டுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்தபிறகே டிக் அடிக்கிறார்கள். 

8 /8

அதிகாரிகள் கறார் காட்டுவதால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் ஆவணங்கள் விஷயத்தில் எந்த தவறும் செய்துவிடக்கூடாது என்பதை நினைவில் கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள்.