சகல தோஷங்களும் போக்கும் இன்று வைகாசி தேய்பிறை பிரதோஷம்.
வாழ்வில் ஏற்படும் துயரங்கள் தீர சிவபெருமானை பிரதோஷ காலங்களில் வழிபடுவது சிறந்தது. அந்த வகையில் வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.
வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.
சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அற்புதமான ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். இன்று பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்யுங்கள். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.
இந்த முறையில் வைகாசி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் தீரும். மரண பயம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.