Planets Transit February 2025: சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் உள்பட மொத்தம் 4 கிரகங்கள் வரும் பிப்ரவரியில் பெயர்ச்சி ஆகின்றன. இதனால், இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக மாற உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சூரியன் என 4 கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன. இதனால், இந்த 5 ராசிக்காரர்களின் (Zodiac Signs) வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.
ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலத்தில் வெவ்வேறு ராசிகளுக்கு இடையே பெயர்ச்சி ஆகும். கிரகங்களின் பெயர்ச்சியால் (Grah Peyarchi) சில ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறும். சில கிரக பெயர்ச்சிகளால் சிலரின் வாழ்க்கையில் பிரச்னையும் வரலாம்.
அந்த வகையில், வரும் பிப்ரவரி மாதம் வர இருக்கும் கிரக பெயர்ச்சிகள் குறித்து இங்கு பார்க்கலாம். அந்த வகையில், சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் உள்பட மொத்தம் 4 கிரகங்கள் வரும் பிப்ரவரியில் பெயர்ச்சி ஆகின்றன.
வரும் பிப்.4இல் குரு பகவான் ரிஷப ராசியிலும், பிப்.11இல் புதன் கிரகம் கும்ப ராசியிலும், ஜன. 12இல் சூரியன் கும்ப ராசியிலும் பெயர்ச்சி ஆகின்றன. சனி பகவான் ஏற்கெனவே கும்ப ராசியில் இருப்பதால் மூன்று கிரகங்களும் இணையும் காரணத்தால் திரிகிரகி யோகம் உண்டாகும். மேலும், பிப். 23ஆம் தேதி செவ்வாய் பகவான் கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால், இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக மாற உள்ளது.
மேஷம் (Aries): பிப்ரவரியில் இந்த ராசிக்காரர்களின் பணி வாழ்வில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வியில் மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும். பணியிலும் லாபம் அதிகமாகும். ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். போட்டித் தேர்விலும் வெற்றியே கிடைக்கும்.
மிதுனம் (Gemini): குரு பகவானின் அருளால் வியாபார செய்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். திருமணம் சார்ந்து நல்ல தகவல் கிடைக்கும். கிரகங்களின் அருளால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலையிலும் பணி உயர்வு கிடைக்கும்.
கடகம் (Cancer): ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் சார்ந்தும் பெரிய பலன் கிடைக்கும். இருப்பினும் எதிர்பாராத எதிரிகளின் தாக்குதல் உங்களை நோக்கி வரும். வணிகம் சார்ந்த பயணத்தில் நல்ல பலன் கிடைக்கும். எழுத்து மற்றும் பதிப்பகம் சார்ந்த வேலைகளில் நல்ல வருமானம் வருகிறது. தேங்கி நிற்கும் வேலைகள் அனைத்தும் நடக்கும். குடும்ப சொத்துகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம் (Leo): குழந்தைகள் சார்ந்த நல்ல செய்தி வரும். காதல் வாழ்விலும் நல்ல செய்தி வரலாம். பணியிடத்திலும் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப சொத்து சார்ந்த பிரச்னைகள் நீங்கும். குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம் (Aquarius): பிப்ரவரி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான மற்றும் நன்மையான காலகட்டமாகும். கிரகங்களின் பெயர்ச்சியால் நேர்மறையான தாக்கம் வாழ்வில் உண்டாகும். சகோதாரர்களிடம் பிரச்னைகள் தவிர்க்கவும், கோபம் கொள்ளக்கூடாது. புதிய வணிகம் தொடங்கவும் நல்ல காலம் ஆகும். கல்வியிலும், போட்டியிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா போகும் வாய்ப்பும் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யப்படவில்லை.