தமிழ் படங்களில் தலை காட்டாத சமந்தா! காரணம் இதுதான்..அவரே சொன்னது

Why Samantha Is Not Acting In Tamil Films : பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா, கடந்த 3 ஆண்டுகளில் பெரிதாக தமிழ் படங்களில் தலைக்காட்டவே இல்லை. அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jan 25, 2025, 12:39 PM IST
  • தமிழ் படங்களில் நடிக்காத சமந்தா!
  • கடைசியாக நடித்த தமிழ் படம் காத்து வாக்குல ரெண்டு காதல்..
  • மீண்டும் தமிழுக்கு நடிக்க வராதது ஏன்?
தமிழ் படங்களில் தலை காட்டாத சமந்தா! காரணம் இதுதான்..அவரே சொன்னது title=

Why Samantha Is Not Acting In Tamil Films : தமிழில் சில நடிகைகளுக்கு அதிக ரசிகர் கூட்டம் உண்டு. அப்படி, தென்னிந்திய அளவில் அதிகமான ரசிகர்களை பெற்ற நடிகைகளுள் ஒருவர், சமந்தா. பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களின் நடித்து ரசிகர்களின் மனங்களின் இடம்பெற்றார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவரை பெரிதாக இந்த படங்களிலும் பார்க்க முடிவதில்லை. 

பிரேக் எடுத்த சமந்தா: 

நடிகை சமந்தாவிற்கு கடந்த நான்கு வருடங்களாக பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தன. முதலில் அவரது காதல் திருமணம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே விவாகரத்தில் முடிந்தது. இதை அடுத்து, தனித்து நடித்து சில படங்களில் தோல்வியை தழுவினார். கூடவே சேர்ந்து மையோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்புக்கும் ஆளானார். 

இப்படி பல விஷயங்களினால் வாழ்வின் கடினமான தருணங்களை எதிர்கொண்ட சமந்தா தான் சினிமாவில் இருந்து சில மாதங்கள் பிரேக் எடுப்பதாக அறிவித்தார்.

கடைசியாக நடித்த தமிழ் படம்…

நடிகை சமந்தாவிற்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள்தான். சினிமாவில் பிரேக் எடுப்பதாக அறிவித்ததற்கு முன்னர் இவர் கடைசியாக நடித்த தமிழ் படம், காத்து வாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவர் காதலிக்கும் இரண்டு பெண்களாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். 

சமந்தா, கத்தீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. திரைக்கதை புதுமையாக இருந்ததாலும், ஆங்காங்கே கதையில் ஓட்டைகள் இருந்ததாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு சமந்தா எந்த தமிழ் படத்திலும் தலை காட்டவில்லை.

காரணம் என்ன? 

சமந்தா சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், காத்து வாக்குல இரண்டு காதல் படத்திற்கு பிறகு வேற எந்த தமிழ் நடிக்காதது ஏன் என்பது குறித்து பேசியிருந்தார். “பல படங்களில் நடிப்பது சுலபமான விஷயம்தான். ஆனால் நான் எந்த படத்தில் நடித்தாலும் அது எனது கடைசி படம் போல நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். படம் பார்ப்பவர்களிடமும் அதே போல ஒரு தாக்கத்தை அந்த படம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் 100% ஒரு படத்தின் கதையை நான் நம்பவில்லை என்றால் அதில் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்” என கூறி இருக்கிறார். 

என கூறினார். ரசிகர்கள், தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, தவறான படங்களை தேர்ந்தெடுத்து வீணடித்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமந்தா நடித்த வெப் தொடர்:

நடிகை சமந்தா, சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் முன் சிட்டடெல் வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடரும் எதிர்பார்த்த அளவு வரவேற்பினை பெறவில்லை. அடுத்து, ராக்த் பிரம்மாத் என்ற இன்னொரு வெப் தொடரிலும் ஆதித்யா ராய் கபூருடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

மேலும் படிக்க | சமந்தாவுக்கு 39 வயது நடிகருடன் காதல்?! இன்ஸ்டா போஸ்டால் வெளிவந்த விஷயம்!

மேலும் படிக்க | தனது திருமண புகைப்படத்தை இன்னும் டெலீட் செய்யாமல் இருக்கும் சமந்தா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News