Astrology: சனியின் ராசியில் சுக்கிரன் நுழைந்ததால் மாற்றம் ஏற்பட்ட ராசிகள்

சனியின் சொந்த ராசியான மகர ராசியில் சுக்கிரன் நுழைந்திருக்கிறார். ஜனவரி 29 வரை பின்னோக்கிய இயக்கத்தில் சுக்கிரன் இருப்பதால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்ட ராசிக்காரர்கள்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2021, 06:12 AM IST
  • சனியின் ராசியில் சுக்கிரன்
  • மாற்றங்கள் ஏற்படும் ராசிகள்
  • ஜனவரி 29க்கும் சுக்கிரன் மீண்டும் பாதையை மாற்றுகிறார்
Astrology: சனியின் ராசியில் சுக்கிரன் நுழைந்ததால் மாற்றம் ஏற்பட்ட ராசிகள் title=

புதுடெல்லி: ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியான சுக்கிரன் தனது நேர் பாதையில் இருந்து விலகி, பின்னோக்கி அதாவது தலைகீழ் இயக்கத்தில் மகர ராசிக்கு சென்றுள்ளார். சுக்கிரன் ஜனவரி 29 வரை பின்னோக்கிய இயக்கத்தில் இருக்கும். இதற்குப் பிறகு, சுக்கிரன் நேர்கோட்டிற்கு வந்துவிடும். 

டிசம்பர் 19ம் தேதி சனியின் ராசிக்குள் நுழைந்துள்ள சுக்கிரன் ஜனவரி 29 வரை பின்னோக்கி இருப்பார். இது தவிர மீன ராசியில் சுக்கிரன் வலுப்பெற்றிருக்கிறார். மறுபுறம், சுக்கிரன் வலுவிழந்து, கன்னி ராசியில் பலவீனமாக இருக்கிறார். சுக்கிரனின் இந்த மாற்றத்தின் தாக்கம் ஏற்ற இறக்கங்களை கொடுக்கும்

சுக்கிரன் தலைகீழ் சஞ்சாரத்தின் சுப பலன்களை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் 
மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மகர ராசியில் சுக்கிரனின் தலைகீழ் சஞ்சாரம் சாதகமாக அமையும். சுக்கிரனின் இந்த மாற்றம் இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பை அதிகரிக்கலாம். கடனாக கொடுத்த பணமும் திரும்ப வழங்கப்படும். இது தவிர மீன ராசியினருக்கு சுக்கிரன் மாற்றம் (Meena Rasi) சிறப்பாக இருக்கும். மீன ராசியினருக்கு பண வரவு அதிகரிக்கும்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

சுக்கிரனின் தலைகீழ் சஞ்சாரம் யாருக்கு அசுபமானது?
சுக்கிரனின் தலைகீழ் இயக்கம் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்வலைகளை உண்டாக்கும். சுக்கிரனின் பின்னோக்கிய சஞ்சாரம் மிதுனத்தின் எட்டாம் வீட்டில் நடந்துள்ளது. இதனால் மிது ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஏற்படும். அதேபோல் கடக ராசிக்காரர்களுக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம். சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது.

(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது)

Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News