ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் - நிர்மலா சீதாராமன் சர்பிரைஸ் அறிவிப்பு

Budget, e-Shram Insurance | ஸ்விகி, சொமேட்டோ போன்ற முறைசாரா ஆன்லைன் தொழிலாளர்களுக்கும் இலவச காப்பீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 1, 2025, 02:34 PM IST
  • ஸ்விகி சொமேட்டோ ஊழியர்களுக்கு சர்பிரைஸ்
  • மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இன்சூரன்ஸ்
  • நிர்மலா சீதாராமன் கொடுத்த சர்பிரைஸ் அறிவிப்பு
ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் - நிர்மலா சீதாராமன் சர்பிரைஸ் அறிவிப்பு title=

Budget 2025 Insurance | மத்திய பட்ஜெட்டில் நல்ல பல அறிவிப்புகள் இடம்பெற்ற வரிசையில் ஸ்விகி, சொமேட்டோ ஊழியர்களுக்கும் சர்பிரைஸ் அறிவிப்புகளை வெளியிட்டு மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆம், ஸ்விகி, சொமேட்டோ ஜெப்டோ மற்றும் பிக்பாஸ்கெட் ஓலா-உபர், அமேசான், பிளிப்கார்ட் போன்ற முறைசாரா, ஆன்லைன் செயலி மற்றும் தளங்களுக்கு வேலை செய்யும் டெலிவரி பார்ட்னர்களுக்கும் இனி இலவச இன்சூரன்ஸ் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இப்படியான முறைசாரா தொழில் துறையில் இருப்பவர்கள் கிக் வொர்க்கர்ஸ் (GIG Workers) என அழைக்கப்படுவார்கள். இப்போது இந்த துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அரசின் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவர்களும் இ-ஷ்ரம் போர்டலில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு இலவச காப்பீடு கிடைக்கும். மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு ஸ்விகி, சொமேட்டோ தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் மத்திய அரசை பொறுத்தவரை முதலில் இதுபோன்ற கிக் தொழிலாளர்களுக்காக இ-ஷ்ரம் போர்டலில் தரவுதளத்தை உருவாக்க உள்ளது. அதில் இந்த தொழிலாளர்கள் முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும். 

இ-ஷ்ரம் கார்டு என்றால் என்ன?

மத்திய அரசு e-Shram Yojana என்ற திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் தான் இது. 

அமைப்பு சாரா தொழிலாளர்கள் யார்? 

மீனவர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், பால் விவசாயி, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளி, லேபிளிங் மற்றும் பேக்கிங் தச்சர், பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலாளி, உப்பு தொழிலாளி, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலையாட்கள், முடி திருத்துபவர், செய்தித்தாள் விற்பனையாளர்கள், ரிக்ஷா ஓட்டுனர், ஆட்டோ டிரைவர், பட்டு உற்பத்தி தொழிலாளி, வீட்டு வேலைக்காரர்கள், MGNREGA தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள்.

இ-ஷ்ரம் கார்டு பெறுவது எப்படி?

* e-SHRAM போர்ட்டலைப் பார்வையிடவும் (https://eshram.gov.in/).
* முகப்புப் பக்கத்தில் உள்ள eShram Register விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
* EPFO, ESIC கணக்குகள் இருந்தால் ஆம் என்றும், அந்த தகவலை உள்ளிட்ட வேண்டும். இல்லை என்றால் No பதிலை அளிக்க வேண்டும்.
* இதற்குப் பிறகு OTP சரிபார்ப்பு செயல்முறை முடிக்கப்பட வேண்டும்.
* பின்னர் நீங்கள் முகவரி, கல்வித் தகவல்களைக் கொடுக்க வேண்டும்.
* செய்யும் தொழில் பெயர், தொழில் முறை (உணவு, மருத்துவம்...), வேலை வகையைத் (ஆன்லைன், ஆப்லைன்) தேர்ந்தெடுக்கவும்.
* வங்கி விவரங்களை உள்ளிட்டு self-declaration விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* இதற்குப் பிறகு 'submit' பட்டனை கிளிக் செய்யவும்.
* மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP-ஐ உள்ளிட்டு 'Verify' பட்டனை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு இ-ஷ்ரம் கார்டு உருவாக்கப்படும், அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

அரசின் திட்டங்களை அணுகலாம்

இ-லேபர் கார்டு மூலம், தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம், இறப்பு காப்பீடு, ஊனமுற்றால் நிதி உதவி போன்ற பல்வேறு சலுகைகளைப் பெறலாம். இ-ஷ்ரம் கார்டின் நோக்கம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் போர்டல் மூலம் அனைத்து புதிய அரசு திட்டங்கள் மற்றும் வசதிகளுக்கான அணுகலை வழங்குவதாகும்.

இ-ஷ்ரம் கார்டின் நன்மைகள்

பிரதான் மந்திரி மந்தன் யோஜனாவின் கீழ், 60 வயதுக்குப் பிறகு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும். நீங்கள் பகுதியளவு ஊனமுற்றவராக இருந்தால், உங்களுக்கு ரூ.1,00,000 நிதி உதவியும், ரூ.2,00,000 இறப்பு காப்பீடும் கிடைக்கும்.

மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, குறைகிறது.. லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | இனி யாரெல்லாம் வரி கட்ட தேவையில்லை? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க | Budget 2025: வரிச் சலுகை, மலிவான மருந்துகள்... சாமானியர்களுக்கு அடித்த ஜாக்பட், முழு பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News