மாத வருமான திட்டம்: மாதம் ரூ.9,250 வட்டி வருமானம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்

Post Office | போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் மாத வருமானம் ரூ .9,250 கொடுக்கும் சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 6, 2025, 03:37 PM IST
  • மாத வருமான திட்டம் எதிர்பார்க்கிறீர்களா?
  • போஸ்ட் ஆபீஸில் இருக்கும் சேமிப்பு திட்டம்
  • மாதம் 9 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
மாத வருமான திட்டம்: மாதம் ரூ.9,250 வட்டி வருமானம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் title=

Post Office Monthly Income Scheme | பிரதான பொது சேமிப்பு திட்டங்களில் ஒன்றான போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் (POMIS), பாதுகாப்பான முதலீட்டாகவும், நிலையான வருமானத்தை உறுதி செய்யக்கூடியதாகவும் உள்ளது. மாதந்தோறும் நிலையான வட்டியுடன் வருமானம் பெற விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

POMIS – 7.4% ஆண்டு வட்டி

தற்போது தபால் அலுவலக மாத வருமான திட்டத்தில் வருடாந்திர வட்டி 7.4% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதில், தனி கணக்கு மூலம் அதிகபட்சம் ₹9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கு (Joint Account) மூலம் அதிகபட்சம் ₹15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது அரசால் ஆதரிக்கப்பட்ட சிறு சேமிப்பு திட்டமாக இருப்பதால் முழு பாதுகாப்புடன் இருக்கும்.

POMIS கணக்கு திறப்பதற்கு யார் தகுதி உடையவர்கள்?

ஒற்றை கணக்கு (Single Account) – ஒரு பெரியவர் தனிப்பட்ட முறையில் கணக்கு தொடங்கலாம்.

கூட்டு கணக்கு (Joint Account) – அதிகபட்சம் மூன்று பேர் சேர்ந்து தொடங்கலாம்.

காவலர் (Guardian) – ஒரு சிறுவர் அல்லது மனநிலையளவில் தேவைப்படும் பாதுகாப்புக்கு அவரது காவலர் கணக்கு தொடங்கலாம்.

10 வயதிற்கும் மேற்பட்ட சிறுவர் – தனது பெயரில் கணக்கு தொடங்கலாம்.

POMIS கணக்கில் முதலீடு செய்வதற்கான விதிகள்

கணக்கு தொடங்க குறைந்தபட்சம் ₹1,000 முதலீடு செய்ய வேண்டும்.

₹1,000 மடங்காக தொகை சேர்க்கலாம் (எ.கா. ₹2,000, ₹5,000, ₹10,000 போன்றவை).

தனி கணக்கில் ₹9 லட்சம், கூட்டு கணக்கில் ₹15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

கூட்டு கணக்கில் உள்ள ஒவ்வொருவருக்கும் சம அளவு உரிமை இருக்கும்.

மாதாந்திர வருமானம் – எவ்வளவு கிடைக்கும்?

முதலீடு வருடாந்திர வட்டி (7.4%), மாத வட்டி விவரம்

₹15,00,000 (Joint Account) ;  வருடாந்திர வட்டி ரூ. 1,11,000, மாதாந்திர வட்டி ரூ. 9,250 கிடைக்கும்.

₹9,00,000 (Single Account) : வருடாந்திர வட்டி ரூ.66,600, மாந்திர வட்டி ரூ. 5,550 கிடைக்கும்.

POMIS முடிவடைந்தவுடன் என்ன செய்யலாம்?

கணக்கு 5 ஆண்டுகள் காலாவதி (Maturity) ஆகும்.

5 ஆண்டுகள் முடிந்ததும், மீண்டும் நீட்டிக்கலாம்.

மீண்டும் தொடர விருப்பமில்லையெனில், முதலீடு செய்த முழு தொகையும் திருப்பி கிடைக்கும்.

முதலீட்டை முன்கூட்டியே திரும்ப பெறலாமா?

1 வருடத்திற்கு முன் – கணக்கை மூட முடியாது.

1 முதல் 3 ஆண்டுகள் வரை – 2% கட்டணம் கழித்துவிடப்படும்.

3 முதல் 5 ஆண்டுகளுக்கு மத்தியில் – 1% கட்டணம் கழித்துவிடப்படும்.

முதலீட்டை திரும்ப பெற, உரிய விண்ணப்பத்துடன் தபால் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

POMIS Vs பேங்க் FD – எந்தவென்று சிறந்தது?

தபால் அலுவலக திட்டங்களில் அரசு ஆதரவு இருப்பதால் FD-யை விட பாதுகாப்பானது.

7.4% வட்டி என்பது வங்கியின் FD-வை விட அதிகம்.

தொடர் மாத வருமானம் பெற சிறந்த தேர்வு.

மூத்த குடிமக்களாக இருப்பவர்கள், நிலையான வருமானத்திற்கும் சிறந்த தேர்வாக தபால் அலுவலக மாத வருமான திட்டம் (POMIS) இருக்கும். மாதந்தோறும் ஒரு நிலையான வருமானம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பு!

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி SwaRail... டிக்கெட் புக்கிங் முதல்... உணவு ஆர்டர் வரை

மேலும் படிக்க | PM Kisan: 19வது தவணை இந்த நாளில் வரும், ஆனால் இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News