நிம்மதியான தூக்கம் இல்லையா? அப்போ நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இவர்தான்!

ஜேஷ்டா தேவி வழிபாடு செல்வ வளத்தை பெருக்குவதோடு, ஆரோக்கிய வாழ்வின் முக்கியமானதான நிம்மதியான தூக்கத்தை தருகிறது என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2021, 12:25 PM IST
நிம்மதியான தூக்கம் இல்லையா? அப்போ நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இவர்தான்! title=

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, நீளா தேவி, அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார்.

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர் (Thiruvalluvar), ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். சமசுகிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். இந்துத் தொன்மவியல்படி, பாற்கடலைக் கடைந்த போது ஜேஷ்டா தேவி தோன்றியதாகக் கூறப்படுகிறது. அவரது தங்கை லட்சுமி (Lakshmi) அமிர்தம் தோன்றும் முன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது.

ALSO READ | நிதி தடுமாற்றத்தில் இருந்து தப்பிக்க? இந்த விஷயங்களைச் செய்யுங்கள்

 

ஒரு நாள் யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும், மூத்த தேவியான ஜேஷ்டா தேவிக்கும் சர்ச்சை உண்டானது. இருவரும் நாரதரை அணுகினார்கள். ஸ்ரீ தேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூத்ததேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூத்த தேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி (Devi) கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். அதனால் நாரதர் இருவரையும் முன்னும், பின்னுமாக நடந்து காட்டச் சொன்னார். ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூத்ததேவி போகும் போது அழகு!" என்று நாரதர் சொல்ல இருவருக்குமே மகிழ்ச்சி.

மூத்ததேவி எனும் ஜேஷ்டா தேவி
வீடுகளில் யாராவது  மூதேவி என்று திட்டினால் அப்படி சொல்லக் கூடாது என்று நம் வீட்டில் பெரியவர்கள் கண்டிப்பார்கள். மூதேவி என்பவள் புராணங்களின் படி மகாலஷ்மியின் மூத்த சகோதரி. அவளும் லஷ்மி தேவியைப் போல துதிக்கப்பட வேண்டியவள். அவள் தீய தெய்வம் அல்ல. தீமையை  எடுத்துக் காட்டி உயிரினங்களை நல் வழிப்படுத்த விஷ்ணுவினால் தோற்றம் தரப்பட்டவளே மூதேவி என்பவள்.

ALSO READ | ‘காயத்திரி’ மந்திரம் சொல்வதால் நடக்கும் அதிசயம் தெரியுமா?...

ஜேஷ்டா தேவி வழிபாடு:
இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி அல்லது மூத்த தேவி ஆகும். ஜேஷ்டா தேவி வழிபாடு செல்வ வளத்தை பெருக்குவதோடு, ஆரோக்கிய வாழ்வின் முக்கியமானதான நிம்மதியான தூக்கத்தை தருகிறது என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. தூக்கத்தின் முக்கிய காரகரான புதனின் நாளில் ஜேஷ்டா நக்ஷத்திரம் எனும் கேட்டை நக்ஷத்திர நாளில் புதனையும் ஜேஷ்டா தேவியையும் வணங்கி வளமான வாழ்வும் நிம்மதியான தூக்கமும் பெற்று வாழ்வோமாக!

ஜேஷ்டா தேவி கோயில் எங்கிருக்கிறது?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை அருகே கெஞ்சனூர் கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த மேகலீஸ்வரி, நேமிலீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜேஷ்டா தேவியை லலிதாபரமேஸ்வரி என்னும் பெயரில் மக்கள் வணங்கி வருகின்றனர்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News