Saif Ali Khan Attacked, Latest News Updates: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மும்பை பாந்த்ரா வீட்டில் இன்று அதிகாலை சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை முயற்சியின்போது திருடர்கள் சைஃப் அலிகானை 6 முறை கத்தியால் குத்தி உள்ளனர். இதை தொடர்ந்து சைஃப் அலிகானை, அவரது மூத்த மகன் இப்ராகிம் ஆட்டோ ரிக்ஷாவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
23 வயதான இப்ராஹிம் நடிகராகவும் உள்ளார். இன்று அதிகாலை கத்திக்குத்தால் சைஃப் அலிகான் காயமடைந்த போது, தக்க நேரத்தில் அவர்களது கார் தயாராகவில்லை என கூறப்படுகிறது. எனவே, இப்ராஹிம் துரிதமாக செயல்பட்டு, காருக்காக காத்திருக்காமல் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பாந்த்ரா வீட்டில் இருந்து இரண்டு கி.மீ., தூரம் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
சைஃப் அலிகான் முதுகுத்தண்டில் கத்திக்குத்து
இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சைஃப் அலிகானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் கான் ஆட்டோ ரிக்ஷாவுக்கு அருகில் நின்றுகொண்டு, வீட்டு பணியாளர்களிடம் பேசிக்கொண்டிருப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. சைஃப் அலிகானுக்கு 6 கத்திக்குத்து காயங்கள் ஈடுபட்டுள்ளன.
மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை!! ரஜினியை விட 40 வயது இளையவர்..
கொள்ளையர்களுடன் சைஃப் அலிகான் கைக்களப்பில் ஈடுபட்டபோது அவருக்கு முதுகு தண்டுப் பகுதியிலும், கழுத்திலும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை என சைஃப் அலிகான் தரப்பு தெரிவித்துள்ளது. சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து ஏற்பட்ட நிலையில், மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை முயற்சி இல்லையா...?
சைஃப் அலிகான் தரப்பு இந்த சம்பவத்தை ஒரு கொள்ளை முயற்சி என்றே கூறுகின்றனர். தாக்குதல் நடத்திய நபரை, அத்துமீறி வீட்டில் ஊடுருவியவர் என்றே போலீசார் குறிப்பிடுகின்றனர். சைஃப் அலிகான் தரப்பு குறிப்பிடுவது போன்று கொள்ளை முயற்சியாக போலீசார் இந்த சம்பவத்தை குறிப்பிடவில்லை.
சைஃப் அலிகான் வீட்டில் மறைந்திருந்த தாக்குதல்காரர்கள்
மேலும், சைஃப் அலிகான் வீட்டின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் நடப்பதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பில் இருந்து யாருமே வீட்டின் வளாகத்திற்குள் நுழையவில்லை என கூறப்படுகிறது. அதாவது, தாக்குதல் நடத்தியவர்கள் அதற்கு முன்பே வீட்டிற்கு நுழைந்து யாருக்கும் தெரியாமல், தாக்குதலுக்காக மறைந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. மேலும், சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய அந்த நபரை கண்டுபிடிக்க போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சைஃப் அலிகான் தாக்குதல்: 3 பேர் கைது
சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர், அந்த வீட்டின் பணியாளர்களுக்கு தெரிந்தவராக இருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. பணியாளர்கள் யாராவதுதான் அவர்களை வீட்டிற்குள் அனுமதித்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. 3 பேரை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | 100 கோடி வசூலை எதிர்நோக்கி மதகஜராஜா? 4 நாளில் இத்தனை கோடி வசூலா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ