விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை இரண்டே நாட்களில் நிறைவேற்றிக் காட்டியிருப்பதாக, ராகுல் காந்தி பெருமிதம்....
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. 5 மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் TRS கட்சியும், மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. இதை தொடர்ந்து, காங்கிரஸ் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றனர்.
காங்கிரஸ் கட்சி, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை இரண்டே நாட்களில் நிறைவேற்றிக் காட்டியிருப்பதாக, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, விவசாயிகளின் வேளாண் கடன்களை காங்கிரஸ் அரசுகள் தள்ளுபடி செய்தன.
இதை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசும், தனது மாநில விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்தது. இதனை ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள ராகுல், மூன்று மாநிலங்களிலும், விவசாயிகளுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
It's done!
Rajasthan, Madhya Pradesh & Chhattisgarh have waived farm loans.
We asked for 10 days.
We did it in 2.
— Rahul Gandhi (@RahulGandhi) December 19, 2018
விவசாயிகளிடம் 10 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், இரண்டே நாட்களில் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.