தங்கைக்கு கிப்ட் வாங்க நினைத்த அண்ணன்..! மனைவி செய்த கொடூரம்!

Crime News: தனது தங்கையின் திருமணத்துக்கு கிப்ட் வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணன், அவரது மனைவியின் குடும்பத்தால் கொடூரமாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 24, 2024, 05:18 PM IST
  • தங்கைக்கு ஆசையாய் பரிசு வாங்கிய நபர்.
  • பொங்கி எழுந்த மனைவி.
  • கணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்.
தங்கைக்கு கிப்ட் வாங்க நினைத்த அண்ணன்..! மனைவி செய்த கொடூரம்! title=

Crime News: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா. இவரது மனைவி தான் சபி. சந்திர பிரகாஷ் தங்கைக்கு ஏப்ரல் 26-ம் தேதி திருமணம் செய்ய முடிவாகி இருந்தது. அதற்காக அவர் ஒரு தங்க மோதிரத்தையும், டிவி ஒன்றையும் பரிசாக வாங்க திட்டமிட்டுள்ளார். தனது நாத்தனாருக்கு கிப்ட் வாங்கிக் கொடுப்பது பிடிக்காததால், கணவர் மீது சபிக்கு கொலைவெறி கோபம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் கணவன் - மனைவிக்குள் சண்டையும் ஏற்பட்டுள்ளது. தங்கையின் திருமணத்துக்கு கிப்ட் கொடுக்காமல் இருப்பது தவறு என சந்திர பிரகாஷ் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் அப்செட் ஆன சபி, தனது அண்ணன்களிடம் இதுகுறித்து புகார் செய்துள்ளார். அவர்கள் கூட்டாக சந்திர பிரகாஷுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். 

இதனால் அவரை ஈவு இரக்கம் இல்லாமல், சுமார் 1 மணி நேரம் சபியின் அண்ணன்கள் கட்டையால் அடித்து உதைத்துள்ளனர். வலிதாங்காத சந்திர பிரகாஷ் மயங்கியுள்ளார். அதன்பின் அவரது குடும்பத்தினர் மயங்கியவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடுமையாக தாக்கியதால் ஏற்பட்ட காயத்தால் தான் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | வெப்ப அலை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் 27 வரை மூன்று நாள் விடுமுறை அறிவிப்பு

இதனையடுத்து சபி, அவரது அண்ணன்கள் உட்பட 5 பேரை உத்தர பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கையின் திருமணத்துக்காக கிப்ட் வாங்கிக் கொடுக்க நினைத்த அண்ணனை, தனது அண்ணன்கள் மூலம் அடிக்க வைத்து, கொலையே செய்துள்ளார் அவரது மனைவி. அதனால் கணவன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Heatwave Warning எட்டு மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை.. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News