பாக்., சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவிலிருந்து கோபால் சிங் நீக்கம்!

பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவிலிருந்து காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான கோபால் சிங் சாவ்லா நீக்கப்பட்டுள்ளார்!

Last Updated : Jul 13, 2019, 09:29 PM IST
பாக்., சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவிலிருந்து கோபால் சிங் நீக்கம்! title=

பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவிலிருந்து காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான கோபால் சிங் சாவ்லா நீக்கப்பட்டுள்ளார்!

இந்திய அரசின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவில் இருந்து, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான கோபால் சிங் சாவ்லாவை நீக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானின் கர்தார்புரில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்புரில் இருந்து சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக சிறப்பு பாதை அமைப்பது தொடர்பாக, இரு தரப்பு பேச்சு நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான, கோபால் சிங் சாவ்லா இடம் பெற்றுள்ளார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கர்தார்புர் சிறப்பு பாதை அமைப்பதற்கான துவக்க விழாவில் பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றபோது, அவரை கோபால் சிங் சாவ்லா சந்தித்தார். 

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஆதரவாளரான சாவ்லா, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீதுடன் நெருக்கமான நட்பு வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனால் பிரபந்தக் குழுவில் இருந்து, சாவ்லாவை நீக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. இதனை ஏற்று குழுவில் இருந்து சாவ்லாவை நீக்கி, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Trending News