வெளிமாநிலத்தில் சிக்கி தவிப்பர்களை கொண்டுவர சிறப்பு ரயில் தேவை -ஒடிசா!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர்களை, சொந்த மாநிலத்திற்கு கொண்டு வர சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஒடிசா கேட்டுக்கொண்டுள்ளது.

Last Updated : Apr 28, 2020, 09:58 AM IST
வெளிமாநிலத்தில் சிக்கி தவிப்பர்களை கொண்டுவர சிறப்பு ரயில் தேவை -ஒடிசா! title=

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர்களை, சொந்த மாநிலத்திற்கு கொண்டு வர சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஒடிசா கேட்டுக்கொண்டுள்ளது.

ஒடிசா அரசாங்கத்தால் 15,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துக்களை கொண்டு அண்டை மாநிலங்களிலிருந்து, தொழிலாளர்களை அழைத்து வர முடியும், ஆனால் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற தொலைதூர மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை கொண்டுவருவது கடினம் ஆகும். 

READ | தொழிலாளர்களின் உள்-மாநில இயக்கத்திற்கு ஒடிசா அரசாங்கம் அனுமதி...

இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு வர சிறப்பு ரயில்கள் குறித்து முறையான முடிவு எடுக்கப்படவில்லை என்றும், "இது தொடர்பாக இதுவரை மத்திய அரசுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை," என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அமைச்சர் தெரிவிக்கையில்., ஒடிசா அரசு அனைத்து பேருந்துகளையும் செயல்பாட்டிற்கு கோருகிறது. இருப்பினும், அனைத்து மக்களையும் பேருந்துகளில் கொண்டு வருவது மிகவும் கடினமான பணியாக இருக்கும். தேவைப்பட்டால் அண்டை மாநிலங்களில் இருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படலாம் என்று திட்டமிடுவதாகவும் கூறினார். 

READ | முழு அடைப்புக்கு பின் சொந்த மாநிலம் திரும்ப வேண்டும் எனில் இது கட்டாயம்...

ஒடிசாவுக்குத் திரும்ப ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒடிசா அரசு பதிவு கட்டாயமாக்கியுள்ளது, இந்த நோக்கத்திற்காக ஒரு போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. தவிர, அனைத்து 6,798 கிராம் பஞ்சாயத்துகளிலும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் யாத்ரீகர்கள் அடங்கிய சிக்கித் தவிக்கும் நபர்களின் பதிவு நடைமுறைக்கு வசதியாக BDO-களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவுக்குத் திரும்பும் மக்கள் பஞ்சாயத்து மட்டத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் துறை 7,102 தற்காலிக மருத்துவ முகாம்கள் / மையங்களை 2.27 லட்சம் படுக்கைகளுடன் செயல்படுத்தியுள்ளது, அங்கு திரும்பி வருபவர்களை தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கவும் ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.

Trending News