Lok Sabha Elections: நாட்டில் 2014 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடக்கவுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் பல தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடங்களில் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது.
மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவின் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு ஆதரவைப் பெறுவது கடினமாக இருப்பதாகவும், ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவுக்குப் பிறகு அந்த இடத்தை விட்டு அவர் ஓடிவிடுவார் என்றும் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பூர்வீக தொகுதியான அமேதியை விட்டு வெளியேறியது போல் வயநாடு பாராளுமன்ற தொகுதியை விட்டு வெளியேறி விடுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி கணித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தனக்கு பாதுகாப்பான மற்றொரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரதமர் கூறினார்.
"காங்கிரஸுக்கு வயநாட்டிலும் இப்போது பிரச்சனையாக உள்ளது. அமேதியிலிருந்து ஓட வேண்டிய நிலை வந்தது போல, வயநாட்டையும் விடவேண்டிய நிலை ஏற்படும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
வயநாட்டில் ராகுல் காந்தியின் நிலை பற்றி பேசிய பிரதமர் மோடி, “ நான் கூட பிரயோகிக்காத வார்த்தைகளை பயன்படுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, காங்கிரஸ் தனது இளவரசருக்கு பாதுகாப்பான இடத்தைத் தேடும் என்று நான் நம்புகிறேன்." என்றார்.
இந்தியா கூட்டணிக்கு எதிராக மக்களை எச்சரித்த பிரதமர் மோடி
தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார். இந்தியா கூட்டணியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸானது வேரோ நிலமோ இல்லாத கொடி என்றும், அதை ஆதரிப்பவரையும் அது உறிஞ்சி எடுக்கும் என்றும் கூறினார்.
மகாராஷ்டிராவை வளர்ச்சியடைய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று கூறிய பிரதமர், ஜம்மு காஷ்மீர் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் தான் காரணம் என்றும் தெரிவித்தார். பர்பானியில் நடந்த விஜய் சங்கல்ப் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்! நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம். காஷ்மீர் பிரச்னைக்கு காங்கிரஸ்தான் காரணம். காஷ்மீரில் 370வது பிரிவை காரணம் காட்டி அரசியல் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை! தலித்துகளின் உரிமைகளை காங்கிரஸ் பறித்தது. மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடாவை வளர்ச்சியடைய காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்கவில்லை." என்று குற்றம் சாட்டினார்.
2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களின் ஊடக விவாதத்தை ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், முந்தைய ஊடக விவாதங்களில் “எல்லை தாண்டிய பயங்கரவாதம்” பற்றி அவ்வப்போது பேசப்பட்டது என்றும், இந்த ஐந்து ஆண்டுகளில் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தேர்தலில் அதிகபட்சமாக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் மே 20 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. நாடு முழுவதற்குமான முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படும். நாந்தேட்டில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் படிக்க | கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ