Man Earns 4000 Rupees Daily In Maha Kumbh : ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு பட்டு என்னென்னவோ செய்து உழைக்கின்றனர். அப்படி இருந்தும் கூட கையும் தங்கும் காசு வெகு நாட்களுக்கு இருப்பதில்லை. ஆனால் ஸ்மார்ட் வொர்க் செய்து சம்பாதிப்பவர்கள் மென்மேலே உயர்ந்து போய்க்கொண்டே இருக்கின்றனர். அப்படி ஒருவர் செய்த ஸ்மார்ட் வொர்க் குறித்து செய்தி தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மகா கும்பமேளா 2025:
ஜனவரி 13-ஆம் தேதி ஆரம்பித்து, பிப்ரவரி 26 ஆம் தேதி வரை, பிரியாக்ராஜ் எனும் இடத்தில் நடைபெறுகிறது மகா கும்பமேளா. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த பண்டிகையில் இந்திய அளவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் இடமான சங்கமத்தில் புனித நீராடுவது வழக்கம்.
வழக்கமாகவே அனைத்து கோயில் பண்டிகைகளும் இப்போது தொழில் வளங்களை பெருக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதில் மகா கும்பமேளா ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மட்டும் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்து பலர் வருகை புரிந்திருக்கின்றர். கூட்ட நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நடந்தாலும் மக்கள் இந்த இடத்திற்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இதனை பயன்படுத்தி சிலர் ஸ்மார்ட்டாக சம்பாதித்து வருகின்றனர். அப்படி வெறும் சில்லறைகளை மட்டும் பொறுக்கி தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நபர் குறித்து இங்கு பார்ப்போம்.
காந்தத்தை வைத்து சம்பாதிப்பவர்…
மகா கும்பமேளாவில் பூஜை பொருட்கள், சாப்பாடு பொருட்கள், வீட்டிற்கு தேவையானவை, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பவர்கள் லாபம் பார்ப்பது வழக்கம். ஆனால், இப்படி இது எதையாவது விற்று காசாக்க வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு முதலீடு செய்திருக்க வேண்டும். ஒரு சிலரால் மட்டும் தான் தனது மூளையை மட்டும் முதலீடாக வைத்து, ஸ்மார்ட் ஆக சம்பாதிக்க முடியும். மகா கும்பமேளாவிலும் அப்படி ஒரு நபர் வலம் வருகிறார்.
மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கத்தில் வந்து புனித நீராடுபவர்கள் தங்கள் கையில் இருக்கும் சில்லறைகளை நதியில் தூக்கி எறிவது அல்லது அப்படியே நதிக்குள் போடுவது வழக்கம். ஒரு சிலர் தங்கள் கையில் இருக்கும் செம்பு பொருட்களையும் நதியில் விடுவர். இதனால் கடவுளின் ஆசிர்வாதம் தங்களுக்கு கிடைப்பதாகவும், தாங்கள் செய்த பாவங்களுக்கு இதன் மூலம் புண்ணியம் கிடைப்பதாகவும் ஒரு சிலர் நம்புகின்றனர். இதைவைத்தான் அந்த நபர் சம்பாதித்து இருக்கிறார்.
ஆயிரக்கணக்கில் வருமானம்..
அந்த நபர், திருவேணி சங்கமத்தில் இறங்கி, கையில் இருக்கும் காந்தங்களை நதிக்குள், வளையை வைத்து போடுகிறார். இதன் பின்னர், நதியில் மக்கள் விட்டுச்செல்லும் இரும்பு பொருட்கள், நாணயங்கள் ஆகியவை அதில் ஒட்டிக்கொள்கின்றன. இருக்கும் நாணயங்களை எடுத்துக்கொள்ளும் அவர், பிற இரும்பு மற்றும் செம்பு பொருட்களை விற்று அதை காசாக்கி விடுகிறார். இதனால், அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.4000 வரை வருமானம் கிடைக்கிறதாம். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், தற்போது இந்த நபரை வைரலாக்கி வருகின்றனர். ஒரு சிலர், காசு கொட்டி இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கே ஒரு நாளைக்கு இந்த அளவிற்கு சம்பாத்தியம் வராது என பேசிக்கொள்கின்றனர்.
இந்த நபர், நன்றாக தமிழும் பேசுவதாகவும் இதற்கு முன்னர் கோயமுத்தூரில் சில மாதங்கள் வேலை பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் இணையத்தின் பேசு பொருட்களுள் ஒன்றாக மாறி வருகிறார்.
மேலும் படிக்க | முதலீடே இல்லாமல் 1 வாரத்தில் 40 ஆயிரம் சம்பாதித்த இளைஞன்! எப்படி தெரியுமா?
மேலும் படிக்க | மருமகளையே திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ