கூடவே இருந்து குழி பறிப்பவர்களை ‘இதை’ வைத்து கண்டுபிடிக்கலாம்! உஷாரா இருங்க..

How To Identify A Bad Person : நம்முடன் இருக்கும் சிலர் நமக்கே தெரியாமல் நமக்கே குழி பறிப்பதுண்டு. அவர்களை கண்டுபிடிக்க சிறு சிம்பிள் டிப்ஸ்.   

Written by - Yuvashree | Last Updated : Feb 8, 2025, 01:16 PM IST
  • கூடவே இருந்து குழி பறிப்பவர்கள்..
  • இவர்களை கண்டுபிடிப்பது எப்படி?
  • உஷாராக இருக்க டிப்ஸ்..
கூடவே இருந்து குழி பறிப்பவர்களை ‘இதை’ வைத்து கண்டுபிடிக்கலாம்! உஷாரா இருங்க.. title=

How To Identify A Bad Person : ஒரு நல்ல மனிதர் நம் வாழ்க்கைக்குள் நுழைந்தவுடன் அனைத்தும் அப்படியே அழகாக மாறிவிடும். ஆனால் அதுவே ஒரு தீய நபர் நம் வாழ்க்கைக் கொள் வந்துவிட்டால் நம் வாழ்வில் கொஞ்சநஞ்சம் இருந்த மகிழ்ச்சியும் அமைதியும் கெட்டுவிடும். ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை கண்டுபிடிக்க அவரது தினசரி செயல்பாடுகளை நாம் கொஞ்சம் கவனித்தாலே போதும். அவர் பிறரை எப்படி நடத்துகிறார், நம்மிடையே உண்மையாக நடந்து கொள்கிறாரா என்பது தெரிந்து கொள்ளவும் இந்த டிப்ஸ் உதவும்.

நேர்மை:

இதுபோன்ற நபர்கள் உங்களிடம் தனியாக இருக்கும்போது நெருக்கமாக பழகுவர். ஆனால் பொதுவெளியில் உங்களை யார் என்று தெரியாதது போல நடந்து கொள்வர். அவர்களுக்கு யாரிடமிருந்து லாபம் அதிகமாக கிடைக்கிறதோ அவர் பக்கம் தான் சாய்வர். பிறரை குறித்து பின்னால் பேசுவர். அவர் உங்களிடமும் பிறரை பற்றி குறை சொன்னால்பிறரை பற்றி குறை கூறினால், உங்களை பற்றி பிறரிடம் இப்படி பேசுவதற்கும் தயங்காதவர் என்று அர்த்தம்.

அவர்களுக்கு வேண்டும் போது மட்டும் பேசுவர்..

நட்பு ரீதியாக உங்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ளாதவர்கள் அவர்களுக்கென்று ஏதேனும் ஒரு தேவை வரும்போதுதான் உங்களிடம் பேசுவர். ஆனால் அந்த வேலை முடிந்தவுடன் நீங்களும் அவரும் எந்த உறவையும் ஷேர் செய்து கொள்ளாதது போல் நடந்து கொள்வர். நீங்கள் ஏதேனும் ஆதரவு கேட்கும் போது அவர்களுக்கு அதில் ஈடுபாடு இல்லாதது போல நடந்து கொள்வர்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் மூக்கை நுழைப்பர்..

இப்படிப்பட்ட நபர்கள், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுவர். உங்களைக் குறித்து ரகசியங்களை தெரிந்து கொள்ளும் இவர்கள், அவர்கள் குறித்த ஒரு விஷயத்தை கூட கூற மாட்டார்கள். உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும் விஷயங்களை கூட பேச வைப்பர். சில நாட்களில் அப்படி நீங்க பேசிய விஷயங்களையே வேறு ஒருவர் மூலம், யாரிடம் அந்த விஷயத்தை பகிர்ந்தீர்களோ அவர்கள் இதை சொல்லியதாக கூற கேட்பீர்கள். 

பொறாமை குணம்..

உங்கள் வாழ்க்கையில் சிறிய அல்லது பெரிய வகையில் எந்த வெற்றி நிகழ்ந்திருந்தாலும் அதனை மட்டப்படுத்த யோசிப்பர். நீங்கள் நன்றாக செய்த சில விஷயத்தை அவர்கள் காப்பியடிப்பர். ஆனால் அது ரசனையின் பால் இருக்காது, உங்களுக்கு போட்டியாக வரவேண்டும் என்று எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்கும். நீங்கள் வெற்றி பெறும்போது அவர்கள் அதனால் எரிச்சல் அடைந்தது போல காண்பித்துக் கொள்வர், ஆனால் நீங்கள் தோல்வியடையும்போது உங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பது போல மகிழ்ச்சி அடைவர். 

கதையை மாற்றுவது..

நீங்கள் எது செய்தாலும் உங்களை ஒரு கெட்ட மனிதர் போல உணர வைப்பர். ஒரு பிரச்சனை எழும்போது தவறு இருவர் மீது இருந்தாலும் கூட உங்கள் மீது மட்டுமே பழி போடுவர். அவர் குறித்த தவறே நீங்கள் பேசும்போது கதையே மாற்றி நீங்கள் தான் அனைத்து தவறையும் செய்தது போல காண்பித்துக் கொள்வர். 

மரியாதை குறைவு..

உங்களை நேரடியாக எங்கும் மரியாதை குறைவாக நடத்த மாட்டார்கள். ஆனால் அவர்கள் உங்களைப் பற்றி ஏதேனும் நகைச்சுவை செய்யும்போது, உங்கள் உணர்ச்சிகளை மதிக்காமல் சில விஷயங்களை பேசும்போது அது உங்களுக்கு அசௌகரியதை ஏற்படுத்தும். உங்களுக்கென்று இருக்கும் கனவுகளை, உங்கள் உடலை வைத்து அல்லது உங்களின் வாழ்க்கை முறையை வைத்து ஜோக் அடிப்பர்.

மேலும் படிக்க | பொய்யான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 5 அறிகுறி இருக்கான்னு பாருங்க!

மேலும் படிக்க | உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News