காதலி என வதந்தி பரவிய பெண்ணுடன் ரவி மோகன் போட்டிருக்கும் போட்டோ! என்ன செய்தி?

Ravi Mohan Wishes Kenishaa On Her Birthday : கோலிவுட்டின் பிரபல நடிகராக விளங்கும் ரவி மோகன், காதலி எனக்கூறப்பட்ட கெனிஷாக்காக வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ravi Mohan Wishes Kenishaa On Her Birthday : நடிகர் ஜெயம் ரவி, சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றி இனி தன்னை அப்படியே அழைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டில் தொடர் பட தோல்விகளை சந்தித்த இவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதாகவும் அறிவித்தார். இது திரையுலகினரை அதிர வைத்தது. இதற்கிடையில் இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகிக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை பரவியது. ஆனால் இருவரும் தங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் கெனிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

1 /7

நடிகர் ரவி மோகன், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இதற்கான காரணம் என்ன என்பதை இருவரும் பெரிதாக வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை. இருப்பினும் இணையத்தில், ரவி மோகன் மாமியார் கொடுமைகளை அனுபவித்ததாகவும், இதனால்தான் அவர் பிரிவதற்கு முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ சான்றுகள் எதுவும் இல்லை.

2 /7

16 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள எடுக்கப்பட்ட முடிவுக்கு, ஆர்த்தி உடன்பட்டு வரவில்லை என கூறப்படுகிறது. தன் கனவரை அவர் நிறைய காதலிப்பதாகவும், இன்று வரை அவருடன் சேர அவர் ஆசையாக இருப்பதாகவும் திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

3 /7

ஆர்த்தி-ரவி திருமண விவாகரத்து பிரச்சனையின் போது, விதவிதமான சர்ச்சைகள் எழுந்தன. அதில் ஒன்று, ரவிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.

4 /7

ரவி மோகனுக்கு பெங்களூருவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகியுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவியது. இதற்கிடையே இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது.

5 /7

கெனிஷா ஒரு பாடகி மற்றும் மருத்துவ உளவியலாளர் என்று கூறிய ஜெயம் ரவி, அவர் தனக்கு கடினமான தருணங்களில் இருந்து வெளியில் வர உதவியதாக கூறியிருந்தார்.

6 /7

கெனிஷாவும், தனக்கும் ஜெயம் ரவிக்கும் எந்த விதமான காதல் உறவும் இல்லை என்று கூறி, பரவிய வதந்திகளை தடுத்து நிறுத்தினார். அதன் பிறகு இருவரும் வேறு எந்த புகைப்படங்களையும் வெளியிடவில்லை.

7 /7

கெனிஷாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, ரவி மோகன் கெனிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுள்ளார். இதை கெனிஷாவும் ரீ-ஷேர் செய்து நன்றி தெரிவித்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.