Ration Card | ரேஷன் கார்டு ரத்து செய்வதை இப்போது அதிரடி நடவடிக்கையாக கடைபிடிக்க தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்கள் இந்த புகாரில் சிக்கினால் உடனடியாக ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஏன் ரேஷன் கார்டு ரத்து, யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.
ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்கள் இந்த புகாரில் சிக்கினால் உடனடியாக ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஏன் ரேஷன் கார்டு ரத்து, யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் ரேஷன் கார்டு (Ration Card) பயனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு மலிவு விலையில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் தமிழ்நாடு அரசு இலவச அரிசி மற்றும் கோதுமையும் வழங்கி வருகிறது.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரேஷன் அரிசி இலவசமாக தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால் இதனை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பான புகார்களை தமிழ்நாடு அரசு மிக சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் படி ரேஷன் அரிசியை விற்பனை செய்வதும் குற்றம், ரேஷன் அரிசியை பணம் கொடுத்து பயனாளிகளிடம் வாங்குவதும் குற்றம். இருவருக்குமே சட்டப்படி தண்டனை மற்றும் அபராதம் உள்ளது.
இருப்பினும் சிலர் சட்டத்தை மதிக்காமல் கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை விற்பனை செய்கின்றனர். அதேபோல் கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்குபவர்கள் அதனை மூட்டை மூட்டையாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கடத்துகின்றனர். வாகன சோதனையின்போது பிடிப்பட்டால் ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்தப் பயன்படுத்தப்பட்ட வாகனம் இரண்டும் பறிமுதல் செய்யப்படும்.
இதனையொட்டி தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தமிழ்நாடு அரசு தீரவிமாக கண்காணித்து வருகிறது. அண்மையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிவிப்பில் ரேஷன் அரிசியை விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் குடும்ப அட்டை பண்டகங்கள் இல்லா குடும்ப அட்டையாக மாற்றப்படும் என எச்சரித்துள்ளார்.
அதாவது வெறுமனே குடும்ப அட்டையை அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இனி எப்போதும் இந்த கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது. அத்துடன் ரேஷன் அரிசியை விற்பனை செய்த குற்றத்துக்காக சட்டரீதியான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
எனவே ரேஷன் அரிசி வாங்கும் பொதுமக்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.